எதிர்வரும் உலகக் கோப்பைக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணியில் 10 காத்திருப்பு வீரர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனை மே 18 அன்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. சமீபத்தில் அயர்லாந்தில் நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக தோல்வியை தழுவியது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் உலகக் கோப்பை அணி மே 19 முதல் மே 23 வரை சவுத்தாம்டன் நகரில் முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த முகாமில் 15 பேர் கொண்ட முதன்மை மேற்கிந்தியத் தீவுகள் அணி பங்கேற்றுள்ளது. இரு முறை சேம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணி மே 22 அன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஏஜஸ் பௌல் மைதானத்தில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க உள்ளது.
மே 26 அன்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிராகவும், மே 28 அன்று நியூசிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி பங்கேற்க உள்ளது. ஐசிசி உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிற்கு எதிராக மே 31 அன்று டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மோத உள்ளது. காத்திருப்பு வீரர்கள் பட்டியலை பார்க்கும் போது இரு பெயர்கள் அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. அவர்கள் தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் டுவைன் பிரவோ மற்றும் கீரன் பொல்லார்ட் ஆகியோர் ஆவார்.
டுவைன் பிரவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்தாண்டு தனது ஓய்வினை அறிவித்தார். மறுமுனையில் கீரன் பொல்லார்ட் 2016க்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பெறவில்லை. இருப்பினும் இருவரும் மேற்கிந்தியத் தீவுகளின் சிறப்பான அனுபவ ஆல்-ரவுண்டர்கள். உலகக் கோப்பை அணியில் இவர்கள் அழைக்கப்பட்டால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
மற்றொரு குறிப்பிடப்பட வேண்டிய வீரர்கள் பேட்ஸ்மேன் சுனில் ஆம்ரிஸ் மற்றும் ஆல்-ரவுண்டர் ரேமான் ரீஃபேர். சமீபத்தில் நடந்த முத்தரப்பு தொடரில் இருவரும் விளையாடினர். சுனில் ஆம்ரிஸ் இந்த தொடரில் 69*, 23, 148 மற்றும் 38 ஆகிய ரன்களை விளாசினார். வைரல் காய்ச்சலிலிருந்து சமீபத்தில் குணமடைந்த ஈவின் லிவிஸிற்கு காயம் ஏற்பட்டு உலகக் கோப்பை அணியிலிருந்து விலகினால் சுனில் ஆம்ரிஸ் அவருக்கு பதிலாக இடம்பெறுவார். அத்துடன் ரெய்ஃபெர் பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு உதவுவார்.
ஜான் கேம்பெல், ஜோனாதன் கார்டர், ரோஸ்டன் சேஸ், ஷான் டவ்ரீஜ், கீமோ பால், காரி பீரே ஆகியோரும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனிற்கு காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் கூட இடம் கிடைக்கவில்லை.
மேற்கிந்தியத் தீவுகளின் தேர்வுக்குழு சேர்மேன் ராபர்ட் ஹேனாஸ் கூறியதாவது,
" காத்திருப்பு வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின் தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி மிகவும் வலிமையான அணியாக திகழ்கிறது. அணியில் மாற்று வீரர்கள் தேவைப்பட்டால் தகுந்த மாற்று வீரர்களுடன் களமிறங்க மேற்கிந்தியத் தீவுகள் அணி தயராக உள்ளது. தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி அனுபவ மற்றும் இளம் வீரர்களை கொண்டு சமமான அணியாக திகழ்கிறது. அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயராக உள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளின் முதன்மை உலகக் கோப்பை அணி:
ஜேஸன் ஹோல்டர் (கேப்டன்), ஈவின் லிவிஸ், கிறிஸ் கெய்ல், ஷை ஹோப், ஆன்ரிவ் ரஸல், கரோலஸ் பிராத்வெய்ட், நிக்கோலஸ் பூரான், ஒஸானே தாமஸ், ஃபேபியன் ஆலன், ஷீம்ரன் ஹட்மைர், ஷேனான் கேப்ரியல், கேமர் ரோச், ஆஸ்லி நர்ஸ்.
மேற்கிந்தியத் தீவுகளின் காத்திருப்பு வீரர்கள் பட்டியல்:
சுனில் ஆம்ரிஸ், டுயன் பிரவோ, ஜான் கேம்பெல், கீரன் பொல்லார்ட், ஜோனாதன் கார்டர், ரோஸ்டன் சேஸ், ஷேன் டவ்ரீஜ், கீமோ பால், கேரே பிராரே, ரேமன் ரீபேர்.