இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதே போல அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. அதன் பின் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் விரட்ட கோலியின் 42வது சதத்துடன் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் விளையாடிய இந்திய வீரர்களின் ரேட்டிங்கை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
ஷிகர் தவான் - 1/10
இந்தியாவின் தலைசிறந்த துவக்க வீரர்களுள் ஒருவராக கருதப்படுபவர் ஷிகர் தவான். அதிரடியாக ஆடி இந்திய அணிக்கு ரன்களை குவிக்கும் வல்லமை பெற்றவர். உலககோப்பை தொடரில் காயம் காரணமாக இவர் விலகி பின் இவர் பங்கேற்கும் முதலாவது ஒருநாள் போட்டி இதுவே. இதை விடுங்கள் இதற்க்கு முன் நடைபெற்ற டி20 தொடரிலும் இபவர் சொதப்பிய வந்தார். அதே வேகத்தில் இந்த போட்டியில் வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். எனவே இவருக்கு வெறும் 1 புள்ளிகள் மட்டுமே கிடைக்கிறது.
ரோஹித் சர்மா - 2/10
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் 5 சதங்கள் விளாசி புதிய சாதனை படைத்தவர் ரோஹித். அதன் பின் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியிலும் அரைசதம் விளாசினார். ஆனால் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆரம்பம் முதலே இவர் ரன் எடுக்க தடுமாறி வந்தார். இறுதியில் வெறும் 18 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். எனவே இவருக்கு வெறும் 2 புள்ளிகள் மட்டுமே வழங்கப்படுகிறது.
விராட் கோலி - 9.5/10
இந்திய நைன் கேப்டனான விராட் கோலிக்கு ஒருநாள் தொடர் வந்தால் போதும் சதங்களை குவித்து கொண்டே இருப்பார். அந்தவகையில் இந்த போட்டியில் இந்தியாவின் துவக்க வீரர்களான தவான் மற்றும் ரோஹித் என இருவரும் சொற்ப ரன்களில் வெளியேற இவர் நிலைத்து ஆடி தனது 42 வது சதத்தினை பூர்த்தி செய்தார். அதுமட்டுமின்றி இந்திய அணி இந்த போட்டியை வெல்வதற்கு முக்கிய காரணமே இவர் தான். 125 பந்துகளில் இவர் 120 ரன்கள் குவித்தார். கேப்டனாக இருந்து தனது பங்கினை சிறப்பாக செய்ததற்காக இவருக்கு 9.5 புள்ளிகள் வழங்கப்படுகிறது.
ரிஷாப் பண்ட் - 2/10
இந்திய அணியின் அடுத்த தோணி இவர் தான் என தேர்வுக்குழு இவருக்கு பல வாய்ப்புகளை வாரி வழங்குகிறது. ஆனால் இவரால் அதனை ஒருபோதும் நிறைவேற்ற முடியவில்லை. உலகக்கோப்பை தொடரில் கடைசியாக நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கெதிரான தொடரில் மட்டும் நன்றாக ஆடினார். அதன் பின் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் முதல் போட்டியில் 0, இரண்டாவது போட்டியில் 4 என ஒற்றை இழக்க ரன்களில் வெளியேறினார் இவர். அதை விடுங்க இந்த போட்டிக்கு வருவோம் இந்த போட்டியில் இவர் நான்காவது இடத்தில களமிறக்கப்பட்டார். விராட் கோலியுடன் இணைந்து சிறப்பாக விளையாடி இருக்கலாம் ஆனால் தேவை இல்லாமல் வெறும் 20 ரன்களில் வெளியேறிய இவருக்கு இந்த பட்டியலில் கிடைப்பது 2 புள்ளிகள்.
ஷிரேயாஸ் ஐயர் - 8/10
நன்றா ஆடியும் அணியிலிருந்து நீக்கப்பட்டவர் ஷிரேயாஸ் ஐயர். பின்னர் முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடவே இவருக்கு இந்த தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி 71 ரன்கள் குவித்து அனைவரையும் கவர்ந்தார். ஒருபுறம் விராட் கோலி சதம் அடித்ததால் இவரின் அரைசதம் யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய இவருக்கு இந்த பட்டியலில் 8 புள்ளிகள் வழங்கப்படுகிறது.
கேதார் ஜாதவ் - 3/10
இவர் இந்த போட்டியில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவும் செய்யவில்லை. பேட்டிங்கில் 17 ரன்கள் குவித்தார். அதே போல பல போட்டிகளுக்கு பின் பந்துவீசிய இவருக்கு மிஞ்சியது வெறும் ஏமாற்றமே. எனவே இதில் இவருக்கு 3 புள்ளிகள் கொடுக்கலாம்.
ரவீந்திர ஜடேஜா - 6/10
உலககோப்பைக்கு பின் இவர் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்துள்ளார். அதனால் இவருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் கடைசியில் களமிறங்கிய இவர் 16 ரன்கள் குவித்து அட்டமிழக்காமல் இருந்தார். அதுமட்டுமல்லாமல் 4 ஓவர்கள் பந்துவீசி 15 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார். எனவே இவருக்கு இந்த பட்டியலில் 6 புள்ளிகள் கிடைக்கிறது.
குலதீப் யாதவ் - 7/10
உலககோப்பை தொடரில் பெரிதாக சாதிக்காத இவர் அதன் பின் பங்கேற்கும் முதல் ஒருநாள் போட்டி இதுவே. இதில் 10 ஓவர்கள் முழுமையாக பந்துவீசிய இவர் 59 ரன்களை விட்டுக்கொடுத்தாலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனை அடிப்படையாக கொண்டு இவர் 6 புள்ளிகள் பெறுகிறார்.
புவனேஸ்வர் குமார் - 9/10
இந்த போட்டியில் பந்துவீச்சில் நாயகன் இவர் தான். ஆரம்பம் முதலே தனது ஸ்விங் தன்மையால் மேற்கிந்திய தீவுகளில் பேட்ஸ்மேன்கள் அனைவரையும் கதிகலங்க வைத்தார். அவர்கள் அனைவரும் இவரின் பந்தில் மிகவும் தடுமாறி வந்தனர். இதன் விளைவாக இவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுமட்டுமல்லாமல் இவர் நிக்கோலஸ் பூரனின் விக்கெட்டினை வீழ்த்தியதே இந்த போட்டியின் திருப்பு முனையாக அமைந்தது. ஒருவேளை இவர் அந்த விக்கெட்டினை எடுக்காமல் இருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம். இருந்தாலும் அப்படி நடக்காமல் இந்திய அணியை காப்பாற்றிய இவருக்கு 9 புள்ளிகள் வழங்கப்படுகிறது.
முகமது ஷமி - 8/10
இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கும் இவருக்கு போதிய வாய்ப்பினை அணி நிர்வாகம் வழங்குவதில்லை. உலகக்கோப்பை தொடரின் பெரும்பாலான போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினாலும் இவரை அரையிறுதி போட்டிக்கு இந்திய அணியில் தேர்வு செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதன் விளைவே இந்திய அணி அந்த போட்டியில் தோல்வியை தழுவியது. இந்த ஒருநாள் போட்டியில் இவர் 8 ஓவர்கள் பந்துவீசி 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பங்கினை அணிக்கு சரியாக செய்தார். எனவே இவருக்கு கிடைப்பது 8 புள்ளிகள்.
கலீல் அகமது - 6/10
இந்தியாவின் வளரும் வீரர்களில் ஒருவர் தான் இவர். இவரது சிறந்த பந்துவீச்சினால் பல முறை அணிக்கு உதவியுள்ளார். அதே போல இந்த ஒருநாள் போட்டியில் 7 ஓவர்கள் பந்துவீசிய இவர் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார். எனவே இவர்க்கு இந்த பட்டியலில் கிடைப்பது 6 புள்ளிகள்.