ஷிரேயாஸ் ஐயர் - 8/10
நன்றா ஆடியும் அணியிலிருந்து நீக்கப்பட்டவர் ஷிரேயாஸ் ஐயர். பின்னர் முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடவே இவருக்கு இந்த தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி 71 ரன்கள் குவித்து அனைவரையும் கவர்ந்தார். ஒருபுறம் விராட் கோலி சதம் அடித்ததால் இவரின் அரைசதம் யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய இவருக்கு இந்த பட்டியலில் 8 புள்ளிகள் வழங்கப்படுகிறது.
கேதார் ஜாதவ் - 3/10
இவர் இந்த போட்டியில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவும் செய்யவில்லை. பேட்டிங்கில் 17 ரன்கள் குவித்தார். அதே போல பல போட்டிகளுக்கு பின் பந்துவீசிய இவருக்கு மிஞ்சியது வெறும் ஏமாற்றமே. எனவே இதில் இவருக்கு 3 புள்ளிகள் கொடுக்கலாம்.
ரவீந்திர ஜடேஜா - 6/10
உலககோப்பைக்கு பின் இவர் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்துள்ளார். அதனால் இவருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் கடைசியில் களமிறங்கிய இவர் 16 ரன்கள் குவித்து அட்டமிழக்காமல் இருந்தார். அதுமட்டுமல்லாமல் 4 ஓவர்கள் பந்துவீசி 15 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார். எனவே இவருக்கு இந்த பட்டியலில் 6 புள்ளிகள் கிடைக்கிறது.
குலதீப் யாதவ் - 7/10
உலககோப்பை தொடரில் பெரிதாக சாதிக்காத இவர் அதன் பின் பங்கேற்கும் முதல் ஒருநாள் போட்டி இதுவே. இதில் 10 ஓவர்கள் முழுமையாக பந்துவீசிய இவர் 59 ரன்களை விட்டுக்கொடுத்தாலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனை அடிப்படையாக கொண்டு இவர் 6 புள்ளிகள் பெறுகிறார்.