புவனேஸ்வர் குமார் - 9/10
இந்த போட்டியில் பந்துவீச்சில் நாயகன் இவர் தான். ஆரம்பம் முதலே தனது ஸ்விங் தன்மையால் மேற்கிந்திய தீவுகளில் பேட்ஸ்மேன்கள் அனைவரையும் கதிகலங்க வைத்தார். அவர்கள் அனைவரும் இவரின் பந்தில் மிகவும் தடுமாறி வந்தனர். இதன் விளைவாக இவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுமட்டுமல்லாமல் இவர் நிக்கோலஸ் பூரனின் விக்கெட்டினை வீழ்த்தியதே இந்த போட்டியின் திருப்பு முனையாக அமைந்தது. ஒருவேளை இவர் அந்த விக்கெட்டினை எடுக்காமல் இருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம். இருந்தாலும் அப்படி நடக்காமல் இந்திய அணியை காப்பாற்றிய இவருக்கு 9 புள்ளிகள் வழங்கப்படுகிறது.
முகமது ஷமி - 8/10
இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கும் இவருக்கு போதிய வாய்ப்பினை அணி நிர்வாகம் வழங்குவதில்லை. உலகக்கோப்பை தொடரின் பெரும்பாலான போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினாலும் இவரை அரையிறுதி போட்டிக்கு இந்திய அணியில் தேர்வு செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதன் விளைவே இந்திய அணி அந்த போட்டியில் தோல்வியை தழுவியது. இந்த ஒருநாள் போட்டியில் இவர் 8 ஓவர்கள் பந்துவீசி 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பங்கினை அணிக்கு சரியாக செய்தார். எனவே இவருக்கு கிடைப்பது 8 புள்ளிகள்.
கலீல் அகமது - 6/10
இந்தியாவின் வளரும் வீரர்களில் ஒருவர் தான் இவர். இவரது சிறந்த பந்துவீச்சினால் பல முறை அணிக்கு உதவியுள்ளார். அதே போல இந்த ஒருநாள் போட்டியில் 7 ஓவர்கள் பந்துவீசிய இவர் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார். எனவே இவர்க்கு இந்த பட்டியலில் கிடைப்பது 6 புள்ளிகள்.