அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியாவிற்கெதிரான ஆஸ்திரேலிய தொடர் இந்த வாரத்தில் தொடங்கப் போகிறது.இந்திய ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள்,3 ஒருநாள் போட்டிகள்,4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நவம்பர் 2018 முதல் ஜனவரி 2019 வரை விளையாடப்போகிறது.டி20 தொடரானது பிரிஸ்பேன், சிட்னி, மெல்போர்ன் ஆகிய நகரங்களில் உள்ள ஆடுகளங்களில் நடைபெறுகிறது.
இந்தியா vs ஆஸ்திரேலிய டி20 போட்டிகளின் கடந்த கால போட்டிகளை எடுத்து பார்க்கும் போது இந்திய அணி முன்னணி அணியாக திகழ்கிறது.இதுவரை இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 15 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 10 போட்டிகளில் இந்திய அணியும் 5 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளனர்.கடைசியாக நடந்த இந்திய, ஆஸ்திரேலிய டி20 போட்டி ராஜ்கோட்டில் மழையினால் ரத்து செய்யப்பட்டது. இதுவரை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 6 டி20 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளில் தோல்வியையும் கண்டுள்ளது.
இந்திய கேப்டன் விராட் கோலி சிறந்த பேட்டிங் திறமையை தொடர்ந்து சீராக வெளிப்படுத்த கூடியவர்.இவர் கடந்த 11டி20 போட்டிகளில் 432 ரன்களுடன் 60.22 சராசரியை வைத்துள்ளார். இந்திய அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை ஆஸ்த்ரெலிய ஆடுகளங்களில் வெளிப்படுத்துவார்கள் எனத் தெரிகிறது.ரிஷப் பண்டிற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தோனி இல்லாததால் ரிஷப் ஃபண்ட் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிப்படுத்தினால் தோனிக்கு அடுத்ததாக இவர் அணியில் நிரந்தரமாக பங்குபெற வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களான பில்லி ஸ்டேன்லெக் , ஜெஸன் பெகான்டஆஃப் போன்றோர் இந்திய அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை சீக்கிரமாக எடுக்க முயலுவர்.ஏனெனில் இந்திய மிடில் ஆர்டர் மிகவும் குறைவான ஆட்டத்திறனுடன் உள்ளது. லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களுக்கு ஆஸ்த்ரெலிய தொடர் மிக முக்கியமானதாக அமையும். ஆஸ்த்ரெலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஆஸ்த்ரெலிய அணியின் தொடக்க வீரராக களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரோன் பின்ச் கடந்த 8 டி20 போட்டிகளில் 342 ரன்களை அடித்து 42.75 சராசரியுடன் முன்னணி வீரராக அந்த அணியில் திகழ்கிறார்.
ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை பார்க்கும்பொழுது மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய பேட்ஸ்மேன்கள் அணியில் இனைக்கப்பட்டுள்ளனர். ஆரோன் ஃபின்ச் மற்றும் கிறிஸ் லின் போன்ற அதிரடி வீரர்கள் இந்திய முன்னனி பநதுவீச்சாளர்களான பூம்ரா மற்றும் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சை கணித்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேக்ஸ் வெல் தற்பொழுது டி20யில் ஒரு நல்ல ஆட்டத்திறனுடன் ஆல் ரவுண்டராக திகழ்கிறார்.
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ளனர். பந்தவீச்சானது பூம்ரா மற்றும் புவனேஸ்வர் குமாருடன் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவும் ஆஸ்த்ரெலிய ஆடுகளங்களில் அச்சசூழலுக்கு ஏற்ப சிறப்பாக பந்து வீசும் திறனுடன் உள்ளனர்.
ஆஸ்திரேலியா அணி இந்த ஆண்டு தொடர் தோல்விகளினால் துவண்டுள்ளதால் இந்திய தொடரில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேக்ஸ் வெல் மற்றும் ஆரோன் ஃபின்ச் போன்ற அனுபவ வீரர்களின் வழிகாட்டுதலின் படி சிறப்பான ஆட்டத்தை ஆஸ்த்ரெலியா வெளிபடுத்தும் எனத் தெரிகிறது.எனவே கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த ஆஸ்த்ரெலிய தொடர் ஒரு சிறந்த விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்து : நமிதா ஜெய்ன்
மொழியாக்கம் : சதீஸ்குமார்