இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்டில் முத்திரை பதிக்கப்போவது யார்?

Fifty for Kholi
Fifty for Kholi

வணக்கம் வாசகர்களே!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி (புதன் கிழமை) அன்று தொடங்க உள்ளது. முதல் இரண்டு போட்டிகளை போன்று இந்த போட்டியிலும் அனல் பறக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது ஆட்டம் ரசிகர்கள் இடையே அதிக விறுவிறுப்பை கூட்டியுள்ளது.

சதமடித்த விராட் கோலி மற்றும் புஜாரா:

இந்தியா வீரர்களான புஜாரா மற்றும் கோலி முறையே முதல் மற்றும் இரண்டாம் போட்டியில் சதம் விளாசினர்.

புஜாரா முதல் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ்-ல் 123 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் 71 ரன்களையும் குவித்து முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். அத்துடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

விராட் கோலி முதல் ஆட்டத்தில் சோபிக்கத்தவறினாலும் இரண்டாவது ஆட்டத்தில் தனது பொறுப்பான ஆட்டத்தினால் 123 ரன்களை குவித்தார். இருப்பினும் இந்தியா வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் இரண்டாவது டெஸ்டில் தோல்வியை தழுவியது.

நாதன் லயன்-ன் சூழல் மேஜிக்:

இரண்டாவது இன்னிங்ஸ்-ல் இந்தியா தோல்வியை தழுவுவதற்கு முக்கிய காரணமானவர் நாதன் லயன். ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் பொதுவாக சூழல் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காதவை. அங்கு 5-விக்கெட்கள் வீழ்த்துவது என்பது சுலபமான காரியம் அல்ல. இருப்பினும் முதல் டெஸ்டில் 8 விக்கெட்களும் இரண்டாவது டெஸ்டில் 8 விக்கெட்களும் மொத்தம் 16 விக்கெட்களை கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இவரை தவிர குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் வேகப்பந்துவீச்சில் மிச்சேல் ஸ்டார்க் முக்கிய விக்கெட்களை வீழ்த்துகிறார்.

மூன்றாவது டெஸ்டில் முக்கியமானவர்கள்:

இந்திய அணி:

1) கோலி மற்றும் புஜாராவை அடுத்து இந்தியா அணியின் முக்கியமான பேட்ஸ்மேன் ரஹானே. அவர் இரண்டு ஆட்டங்களையும் சேர்த்து 2 அரைசதங்கள் எடுத்துள்ளார்.

2) மொஹம்மது ஷமி மற்றும் பும்ராஹ் தங்களுது வேகப்பந்துவீச்சினால் கவனம் ஈர்க்கின்றனர்.

3) மூன்றாவது டெஸ்டில் முக்கிய திருப்பமாக ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா அணிக்கு திரும்புவது கூடுதல் பலம். இவர் ஹனுமா விஹாரிக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலிய அணி:

1) ஆஸ்திரேலியா அணியில் நாதன் லயன் மற்றும் மிச்சேல் ஸ்டார்க் சிறப்பாக செயல்பட்டாலும் அந்த அணியின் பேட்டிங் வரிசை பெரிதாக ஒன்றும் சோபிக்கவில்லை.

2) முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸ்-ல் 72 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் ஷேன் மார்ஷ் 60 ரன்களையும் எடுத்தனர்.

3) இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸ்-ல் ஆரோன் பின்ச் மற்றும் டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்தனர்.அதைப்போன்று இரண்டாவது இன்னிங்ஸ்-ல் உஸ்மான் கவாஜா அரைசதம் அடித்தார். இருப்பினும் அந்த அணியில் ஒருவர் கூட அரை சதம் அடிக்காதது அணிக்கு பின்னடைவு தான்.

4) ஆஸ்திரேலியா அணி முழுவதும் அவர்களது பௌலர்களை மட்டுமே நம்பியுள்ளனர்.

யார் பக்கம் வெற்றி?

மேற்கண்ட அலசலின் படி ஆஸ்திரேலியா அணியை காட்டிலும் இந்தியா அணியே வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இருப்பினும் ஆஸ்திரேலியா அணியை குறைத்து மதிப்பிட முடியாது.அந்த அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி அவர்கள் வசமாகக்கூடும் .

போட்டி: AUS Vs IND, 3 வது டெஸ்ட்,2018-19

தேதி: செவ்வாய், டிசம்பர் 25, 2018 - ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 30, 2018

இடம்: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்

Edited by Fambeat Tamil