மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சேம்பியன் ஷீப்பை வெற்றி கணக்குடன் தொடங்கியுள்ளது இந்தியா.
மேற்கிந்திய தீவுகளின் பேட்ஸ்மேன்கள் ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் இஷாந்த் சர்மாவின் அதிரடி பந்துவீச்சிற்கு பதிலளிக்க முடியாமல் விழித்தனர். இதன்மூலம் இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடந்த 22 டெஸ்ட் போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளது.
கரீபியன் மண் கிரிக்கெட் விளையாட ஒரு சிறந்த இடமாகும். ஏனேனில் ஆடுகளத்தின் தன்மை வெவ்வேறு நிலைகளில் இருக்கும். முதல் டெஸ்ட் போட்டியில் கூட முதல் நாளில் வேகப்பந்து வீச்சிற்கு சரியாக அமைந்து நல்ல பவுண்ஸாக மாறியது. இதனால் பேட்ஸ்மேன்களுக்கு மோசமாக அமைந்தது. அடுத்தநாள் மைதானத்தில் வெடிப்புகள் தோன்றியது. இதனால் ஆடுகள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் சாதகமாக அமைந்தது. மேற்கிந்திய தீவுகள் ஆடுகளங்கள் பருவநிலைக்கு ஏற்றவாறு மாறும் தன்மையுடையது.
1970ல் கிரிக்கெட்டில் கொடி கட்டிப் பறந்த மேற்கிந்தியத் தீவுகள் தற்போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த முக்கிய காரணம், கரீபியன் ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாட பழகி கொண்டதே ஆகும். நாம் இங்கு மேற்கிந்தியத் தீவுகளில் (குறைந்தது 10 போட்டிகளில்) டெஸ்ட் போட்டிகளில் 50+ பேட்டிங் சராசரியை கொண்டுள்ள 3 வீரர்கள் பற்றி காண்போம்.
பாலி உம்ரிகர்
பாலி உம்ரிகர் 1950ல் இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக திகழ்ந்தார். மேலும் இவரது சிறப்பான ஆல்-ரவுண்டர் திறன் மற்றும் கேப்டன்ஷீப் மூலம் அந்நிய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கினார்.
மேற்கிந்திய தீவுகளில் இவர் விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 55.83 சராசரியுடன் 1005 ரன்களை குவித்துள்ளார். அந்த கால கட்டத்தில் இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், அவரது சிறப்பான பேட்டிங் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருந்தது.
மேற்கிந்திய தீவுகளின் பௌலிங்கை சிதைத்து களத்தில் நீண்ட நேரம் நிலைத்து விளையாடும் திறன் கொண்டவர் பாலி உம்ரிகர். இவரது கடின உழைப்பினால் மேற்கிந்தியத் தீவுகளில் 7 அரைசதங்கள் மற்றும் 3 சதங்களை குவித்துள்ளார்.
2006ல் இந்திய கிரிக்கெட் வாரியம் பாலி உம்ரிகர்-ஐ கௌரவிக்கும் வகையில் ஒரு வருடத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்களுக்கு இவரது பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
சுனில் கவாஸ்கர்
மேற்கிந்திய தீவுகள் பேட்டிங் மற்றும் பௌலிங் என் இரண்டிலும் ஜொலித்து எதிரணியை நடுநடுங்க செய்த கால கட்டத்தில், சுனில் கவாஸ்கர் என்ற ஒரு கிரிக்கெட் வீரர் மட்டும் மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கை தனது சிறப்பான பேட்டிங்கால் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
கவாஸ்கர் விளையாடிய காலகட்டத்தில் தலைக்கவசம் என எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மேற்கிந்தியத் தீவுகளின் பௌலிங்கை மிகவும் அதிக நுணுக்கத்துடன் விளையாடினார். பவுண்ஸரை மிகவும் அதிக கவனத்துடன் எதிர்கொண்டு விளையாடினார். எனினும் இவரது பேட்டிங் குழந்தைகள் விளையாட்டு போன்றே இருக்கும்.
சுனில் கவாஸ்கர் கரீபியன் மண்ணில் 13 போட்டிகளில் பங்கேற்று 70.20 சராசரியுடன் 1404 ரன்களை விளாசியுள்ளார். டிரினிடாட்-டில் (124 மற்றும் 220) இவர் விளையாடிய போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகளில் நிகழ்த்தப்பட்ட சிறப்பான பேட்டிங் இன்னிங்ஸ் இதுவாகும்.
கவாஸ்கர் ஆரம்பத்தில் நிதான பேட்டிங்கை வெளிபடுத்தி இன்னிங்ஸை படிப்படியாக கட்டமைப்பார். அணியை இக்கட்டான சூழ்நிலையிலிருந்தே மீட்டு எடுக்க சுனில் கவாஸ்கர் வெளிபடுத்திய ஆட்டத்திறனே அவரை பெரும் புகழ் உச்சியை அடையச் செய்தது.