ராகுல் டிராவிட்
அந்நிய மண்ணில் சிறப்பான சாதனைகளை படைத்துள்ள ஒருசில இந்திய வீரர்களுள் ராகுல் டிராவிட்-வும் ஒருவராவார். நம்பர் 3 பேட்ஸ்மேனாக களம் காணும் இவர் பௌலர்களுக்கு கடும் சவாலை அளிப்பார். இவரது பேட்டிங் வித்தை மற்றும் நிதானமான ஆட்டம் எதிரணி பௌலர்களுக்கு ஒரு புரியா புதிராகவே இருக்கும்.
மேற்கிந்திய தீவுகளில் 28 போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் டிராவிட் 65.7 சராசரியுடன் 11 அரைசதங்கள் மற்றும் 3 சதங்களை குவித்துள்ளார். செயிண்ட் லூசியாவில் நடந்த போட்டி ஒன்றில் விரேந்தர் சேவாக் சொற்ப ரன்களில் வெளியேறிய போது, ராகுல் டிராவிட் (146) பொறுமையான மற்றும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீட்டெடுத்தார்.
மேலும் ஜமைக்காவில் நடந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து (142) மேற்கிந்தியத் தீவுகளில் இந்திய அணியின் மறக்க முடியாத வெற்றியைத் தேடித் தந்தார்.
டிராவிட்டின் உறுதியும், நோக்கமும் எதிரணிக்கு கடும் நெருக்கடியை அளித்தது. முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேதீவ் ஹைய்டன் ராகுல் டிராவிட் பற்றி கூறியதாவது: "நீங்கள் ஆடுகளத்தில் ஆக்கிரமிப்பை காண வேண்டுமெனில், ராகுல் டிராவிட்டின் கண்களில் பார்க்கலாம்"
ராகுல் டிராவிட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று 7 வருடங்கள் ஆகிறது. ஆனால் இன்று வரை டெஸ்ட் கிரிக்கெட் என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது ராகுல் டிராவிட் தான்.