இந்திய அணி டி20 போட்டிகள், மற்றும் டெஸ்ட் போட்டிகள், மற்றும் ஒருநாள் போட்டிகள், ஆகிய மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் தலை சிறந்த அணியாக திகழ்கிறது.
இவ்வாறு தலை சிறந்த அணியாக திகழ்வதற்கு முக்கிய காரணம், இந்திய அணியின் பேட்ஸ்மேன்களும் மற்றும் சிறப்பான பந்து வீச்சாளர்களும் தான். அதுவும் முக்கியமாக இந்திய அணியின் வெற்றியை நிர்ணயிப்பது பேட்ஸ்மேன்களின் கையில் தான் இருக்கிறது. இந்திய அணியில் குறைந்த பட்சமாக ஒரு வீரராவது அரை சதம் அல்லது சதம் அடித்தால், இந்திய அணி மதிக்கத்தக்க ஸ்கோரை ஒருநாள் போட்டிகளில் அடித்து வருகிறது. இவ்வாறு இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் அதிக சதம் மற்றும் அரை சதம் அடித்துள்ளனர். அதில் பல வீரர்கள் தற்போது ஓய்வு பெற்று விட்டனர். ஆனால் ஒரு சில மூத்த வீரர்கள் இன்றும் இந்திய அணியில் ஓய்வு பெறாமல் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வாறு தற்போது உள்ள இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளில் அதிக அரை சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலை இங்கு காண்போம்.
#1) தோனி ( 70 அரை சதங்களை விளாசியுள்ளார் )
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் மூத்த வீரர் மற்றும் நமது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி. நமது இந்திய அணியில் மிக அனுபவம் வாய்ந்த வீரராக தோனி தற்போது திகழ்கிறார். தற்போது இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் கேப்டனாக செயல்பட்டாலும் தோனிதான் அணியை வழி நடத்துகிறார். இவர் இதுவரை 281 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் 70 அரை சதங்களை விளாசியுள்ளார்.
#2) யுவராஜ் சிங் ( 52 அரை சதங்களை விளாசியுள்ளார் )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங். இவர் குறுகிய காலமாக நமது இந்திய அணியில் தொடர்ந்து தேர்வு செய்யப்படாமலே இருக்கிறார். இவரும் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என மிகக் கடுமையாக உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால், உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புகள் இருக்கும். இவர் இதுவரை 275 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் 52 அரை சதங்களை விளாசியுள்ளார்.
#3) விராட் கோலி ( 49 அரை சதங்களை விளாசியுள்ளார் )
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. கடந்த சில வருடங்களாக மிகச்சிறப்பான முறையில் அணியை வழிநடத்தி செல்கிறார் விராட் கோலி. தற்போது நமது இந்திய அணியில் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக சராசரி வைத்துள்ள ஒரே வீரர் விராட் கோலி தான். இவர் இதுவரை 211 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, அதில் மொத்தம் 49 அரை சதங்களை விளாசியுள்ளார்.
#4) ரோகித் சர்மா ( 39 அரை சதங்களை விளாசியுள்ளார் )
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் துணை கேப்டன், ரோகித் சர்மா. இந்திய அணியின் டாப் ஆர்டர் மிக வலுவான நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் ரோகித் சர்மா தான். அனைத்து போட்டிகளிலும் சராசரியான ரன்களை அடித்து கொண்டே வருகிறார் ரோகித் சர்மா. அதுமட்டுமின்றி ஒருநாள் போட்டிகளில், சிறந்த பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் இதுவரை ஒருநாள் போட்டிகளில் 39 அரை சதங்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.