சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்த ஜாம்பவான்கள் நமது இந்திய அணியில் உள்ளனர். ஆனால் அவர்கள் கூட பல போட்டிகளில் டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளனர். நமது இந்திய அணிக்காக விளையாடிய ஒரு வீரர், ஒரு முறை கூட டெஸ்ட் போட்டிகளில் டக் அவுட் ஆகாமல் சாதனை படைத்துள்ளார். அந்த வீரரை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
#1) பிரிஜேஷ் படேல்
இவர் 1974 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர். இவர் மொத்தம் 21 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 972 ரன்களையும், 5 அதை சதங்களையும், 1 சதத்தையும் விளாசியுள்ளார். இவர் விளையாடிய 21 டெஸ்ட் போட்டிகளில் ஒருமுறை கூட டக் அவுட் ஆகவில்லை. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஒருமுறை கூட டக் அவுட் ஆகாத ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமன்றி இவர் இந்திய அணிக்காக வெறும் 10 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அதில் 243 ரன்களையும், ஒரே ஒரு அரை சதமும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு முறை கூட டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆகாத மற்ற அணி வீரர்கள்:
#1) ஜிம் பர்கே ( ஆஸ்திரேலிய அணி )
இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 1951 ஆம் ஆண்டு முதல் 1959 ஆம் ஆண்டுகள் வரை சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒரு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கூட ஆஸ்திரேலிய அணிக்காக இவர் விளையாடியது இல்லை. இவர் மொத்தம் 24 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 1280 ரன்களையும், 3 சதங்களையும், 5 அரை சதங்களையும் விளாசியுள்ளார். ஆனால் இவர் விளையாடிய 24 டெஸ்ட் போட்டிகளில் ஒருமுறை கூட டக் அவுட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#2) ராபர்ட் கிறிஸ்டியனி ( மேற்கிந்திய தீவுகள் அணி )
இவர் 1948 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஆனால் இவர் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில் கூட விளையாடியது இல்லை. இவர் மொத்தம் 22 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 896 ரன்களையும், ஒரு சதத்தையும், 4 அரை சதங்களையும் அடித்துள்ளார். இவர் விளையாடிய 22 டெஸ்ட் போட்டிகளில் ஒரு முறை கூட டக் அவுட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் இவரது பேட்டிங் சராசரி 26.35 ஆகும்.
#3) ஹெர்பி காலின்ஸ் ( ஆஸ்திரேலிய அணி )
இவர் 1920 ஆம் ஆண்டு முதல் 1926 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஹெர்பி காலின்ஸ் மொத்தம் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 1352 ரன்களையும், 4 சதங்களையும், 6 அரை சதங்களையும் விளாசியுள்ளார். இவரும் ஒரு முறை கூட டெஸ்ட் போட்டிகளில் டக் அவுட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் இவரது பேட்டிங் சராசரி 45.06 ஆகும்.