ஐபிஎல் தொடர் இந்தியாவில் 2008 முதல் துவங்கி வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகளுடன் துவங்கிய ஐபிஎல் போட்டி இடையில் கொச்சி மற்றும் புனே அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகளுடன் பங்கேற்றன. ஆனால் இந்த இரண்டு அணிகளும் அடுத்த சில ஆண்டுகளிலேயே ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டது. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சென்னை அணியில் மட்டுமே அனைத்து சீசன்களிலும் ஒரே கேப்டன்களை கொண்டுள்ளது. மற்ற அனைத்து அணிகளிலும் தங்களது கேப்டன்களை அவ்வபோது மாற்றியுள்ளன. தோணி( சென்னை, புனே ), காம்பீர்( டெல்லி, கொல்கத்தா ) போன்ற வீரர்கள் இரண்டு அணிகளுக்கு கேப்டனாக இருந்தது நம் அனைவருக்கும் தெரியும். அதேபோல் ஐபிஎல் தொடரில் மூன்று வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாக இருந்த வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1) ஸ்டீவன் ஸ்மித்
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தவர் ஸ்டீவன் ஸ்மித். கடந்தாண்டு தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதற்காக இவர் ஓராண்டு விளையாட தடை செய்யப்பட்டிருந்தார். இவரின் தடைக்காலம் தற்போது முடிவடைந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறார். பேட்டிங்கில் சிறப்பாக விளையாடும் இவர் கேப்டனாகவும் சிறப்பாக அணியை வழிநடத்துவார். இதனால் இவர் 2012 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணியை கேப்டனாக சில போட்டிகளில் வழிநடத்தினார். அடுத்து 2015 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்டர் இவர். அதன் பின்னர் 2017 ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை முழு நேர கேப்டனாக வழிநடத்தி இறுதி போட்டி வரை அணியை கொண்டு சென்றார் ஸ்மித். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் மூன்று வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார் இவர். ஐபிஎல் தொடரில் 24 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார் ஸ்மித்.
#2) மகிலா ஜெயவர்த்தனே
இலங்கை அணியின் ஜாம்பவானான மகிலா ஜெயவர்த்தனே 2010-ல் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார். அப்போது அணியின் கேப்டனாக குமார் சங்ககரா இருந்து வந்தார். அவர் விளையாடாத போட்டிகளில் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ஜெயவர்த்தனே. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக அணியை வழிநடத்தினார் இவர். அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் தோடரில் கொச்சி அணி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அந்த அணிக்கு சீசன் முழுவதும் முழுநேர கேப்டனாக செயல்பட்டார். கடைசியாக 2013-ம் ஆண்டில் டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்டு அணியை வழிநடத்தினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் மூன்று வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்டடுள்ளார் ஜெயவர்த்தனே. மொத்தத்தில் இவர் 30 போட்டிகளில் கேப்டனாக விளையாடியுள்ளார்.
#3) குமார் சங்ககரா
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக சிறந்து விளங்கியவர் குமார் சங்ககரா. இவர் 2010 ஆம் ஆண்டில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார். அதன் பின் 2011 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தினார். இறுதியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 2012-ல் கேப்டனாக செயல்பட்டார் இவர். ஐபிஎல் வரலாற்றிலேயே தொடர்ந்து மூன்றாண்டுகள் வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாக விளையாடியவர் இவரே. இவர் மொத்தத்தில் 47 போட்டிகள் கேப்டனாக அணியை வழிநடத்தியுள்ளார்.