கிரிக்கெட் மொழியில் "நைட் வாட்ச் மேன்" என்ற சொல் புழக்கத்தில் உள்ளது. இந்த சொல்லிற்கு அர்த்தம் என்னவென்றால் பேட்டிங்கில் அதிகம் சோபிக்காதவர்கள். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருநாள் முடிவடைய சிறிது நிமிடங்கள் இருக்கும் போது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பி தனது விக்கெட்டை இழந்தால் அணியின் கேப்டன் தங்களது பேட்டிங் வரிசையை தக்கவைக்க பௌலர்களை அடுத்த பேட்ஸ்மேனாக களம் காண வைப்பார்கள்.
ஆனால் சில சமயங்களில் 11வது பேட்டிங் வரிசையில் களம் காணும் வீரர் தொடக்க வீரராக களம் கண்டுள்ளனர். இவர்கள் ஆரம்பத்தில் வீசப்படும் அதிவேக பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் கஷ்டப்படுவார்கள்.
ஒரு சில சமயங்களில் அணியின் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம் ஏற்பட்டால் கடைநிலை வீரர் ஒருவர் களம் காண அழைக்கப்படுவார். மேலும் பல சமயங்களில் 11வது பேட்ஸ்மேன் அணியின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு பேட்ஸ்மேன் கடும் காயத்தை சந்தித்துள்ளார் எனில் "நைட் வாட்ச் மேன்" என்றழைக்கப்படும் கடைநிலை பேட்ஸ்மேன் களம் காண அழைக்கப்படுவார். நாம் இங்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் தொடக்க ஆட்டக்காரராகவும், நம்பர் 11 பேட்ஸ்மேனாகவும் களம் கண்டுள்ள 5 வீரர்களைப் பற்றி காண்போம்.
ஜேக் லீச்
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சமீபத்தில் அறிமுகமான சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச். கடந்த மாதம் லார்ட்ஸில் நடந்த அயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 86 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி ஆச்சரியத்தை அளித்தபோது ஜேக் லீச் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அயர்லாந்து அணி சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தி முதல் இன்னிங்சில் 122 ரன்களில் முன்னிலை வகித்தது. அப்போட்டியில் நீண்ட நேரங்கள் இருந்தமையால் கண்டிப்பாக போட்டி சமனில் முடிய வாய்ப்பில்லாமல் இருந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் முதன்மை தொடக்க ஆட்டக்காரர் ஜேஸன் ராய்-ஐ தக்க வைக்க நைட் வாட்ச் மேன் ஜேக் லீச் தொடக்க வீரராக 6 ரன்களில் அவுட் ஆன ரோரி பர்ன்ஸீடன் களம் கண்டார்.
இதன்மூலம் ஜேக் லீச், ஒரு டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராகவும், நம்பர் 11 பேட்ஸ்மேனாகவும் களம் கண்ட வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.
ஜேக் லீச் தான் ஆரம்ப நாளில் எதிர்கொண்ட பந்துகளை தடுத்து நிறுத்தியும், அதன்பின் அடுத்த நாள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 92 ரன்களை விளாசி இங்கிலாந்து அணியை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றினார்.
கிரேம் ஸ்மித்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் கிரேம் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனின் பந்துவீச்சில் காயமடைந்தார்.
அதன்பின் அவருக்கு மருத்துவர்கள் கடுமையாக போராடியும் உடனே வலியை குணப்படுத்த இயலாததால் பேவிலியன் திரும்பினார். இந்த போட்டியை டிரா செய்ய கடும் வலியிலிருந்த, கிரேம் ஸ்மித் பேட் செய்ய வேண்டும் என்ற கட்டாயமாக்கப்பட்டார்.
ஆனால் அதிரடி ஆட்டக்காரர் கிரேம் ஸ்மித்தால் தனது உடைந்த கைகளைக் கொண்டு நம்பர் 11ல் பேட் செய்ய முடியாமல் போனதால், தனது அணியை இக்கட்டான நிலையிலிருந்து மீட்க முடியவில்லை. இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராகவும் நம்பர் 11 பேடஸ்மேனாகவும் களம் கண்ட வீரர்கள் பட்டியலில் இணைந்தார். இந்த போட்டியில் கிரேம் ஸ்மித் அதிகம் புகழப்பட்டார்.