ஹாரி பட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் தொடக்க ஆட்டக்காரராவும், நம்பர் 11 பேட்ஸ்மேனாகவும் களம் கண்ட முதல் வீரர் முன்னாள் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஹாரி ரைட்ஜென் பட். போர்ட்ஸ் ஆஃப் எலிசபெத்-தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த இப்போட்டியில் முதல் இன்னிங்சில் ஹாரி பட் நம்பர் 11 வீரராக களம் கண்டார். அப்போது மிடில்டன்-ஆல் சொற்ப ரன்களில் வீழ்த்தப்பட்டார். அன்றைய நாள் ஆட்டம் இறுதி கட்டத்தை நெருங்கியதால், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து இரண்டு ஓவர்களுக்கு பேட்டிங் செய்ய வேண்டியிருந்தது. ஹாரி பட், CW ரைட் உடன் களமிறங்கினார். இதுவே கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக நம்பர் 11 பேட்ஸ்மேன் தொடக்க வீரராக கண்டது ஆகும்
ஆனால் இந்த டெக்னிக் இப்போட்டியில் சரியாக வேலை செய்யாமல் ஹாரி பட் மீண்டுமொருமுறை சொற்ப ரன்களில் வீழ்த்தப்பட்டார்.
அஜீம் ஹபீஸ்
இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அஜீம் ஹபீஸ் பெங்களூருவில் நடந்த இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அஜீம் ஹபீஸ் விளையாடிய 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 4 ரன்களில் ரவி சாஸ்திரியால் வீழ்த்தப்பட்டார்.
அற்புதமான பௌலர் அஜீம் ஹபீஸ் அதிரடி பந்தவீச்சை கொண்ட இந்தியாவிற்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் நைட் வாட்ச் மேனாக களமிறங்கினார். வலிமையான பந்துவீச்சிற்கு இடையே 18 ரன்களை அஜீம் ஹபீஸ் அடித்தார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் நம்பர் 11 மற்றும் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட வீரர்கள் பட்டியலில் அஜீம் ஹபீஸ் இணைந்தார்.
டேனி மோரிசன்
கிரிக்கெட் சகோதரத்துவத்தின் மத்தியில் புகழ்பெற்றவர் முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேனி மோரிசன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் தொடக்க ஆட்டக்காரராகவும், கடைசி பேட்ஸ்மேனாகவும் களமிறங்கிய வீரர்கள் பட்டியலில் இவரும் ஒருவராவார்.
1990ல் இந்தியா நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்திருந்தபோது நடந்த டெஸ்ட் போட்டியில் ஆட்டத்தின் இறுதி இன்னிங்ஸில் இந்தியா நியூசிலாந்திற்கு 2 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. டேனி மோரிசன் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்டு 3 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.