"ஒரு நல்ல மாணவருக்கு ஒரு சிறந்த ஆசிரியர் தேவையில்லை" என்பது பழமொழி. இது கிரிக்கெட் விளையாட்டிற்கும் நன்கு பொருந்துகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த விளங்கிய அனைத்து வீரர்களாலும் சிறப்பான பயிற்சியாளர்களாக ஜொலிக்க இயலவில்லை. கபில் தேவ் மற்றும் கிரேக் சேப்பல் போன்ற தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களால் ஒரு அணியின் பயிற்சியாளர்களாக செயல்பட இயலவில்லை. இவர்களது ஆட்டத்திறனில் எவ்வித குறையும் இல்லை என்றாலும், ஒரு அணியில் உள்ள வீரர்களை சரியாக புரிந்து கொள்வது, வீரர்களுடனான அணுகுமுறை சரியாக இல்லாதிருத்தல் போன்றனவும் காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியாளராக ஜொலித்ததில்லை.
மறுமுனையில் சில கிரிக்கெட் வீரர்கள் தாங்களது கிரிக்கெட் வாழ்க்கை மோசமாக அமைந்தாலும் பயிற்சியாளர்களாக அசத்தியுள்ளனர். இத்தகைய வீரர்கள் ஒரு அணியை கட்டமைத்து அதனை சரியாக நிர்வகிப்பதில் வல்லவர்களாக திகழ்வார்கள். சில கிரிக்கெட் வீரர்கள் ஒரு சர்வதேச போட்டிகளில் கூட விளையாடமல் சர்வதேச அணிகளுக்கு பயிற்சியாளர்களாக திகழ்ந்து அணியை பெரும் நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். நாம் இங்கு ஒரு சர்வதேச போட்டிகளில் கூட களமிறங்காமல் உலக கிரிக்கெட் அணிகளில் பயிற்சியாளர்களாக அசத்திய 5 பயிற்சியாளர்களைப் பற்றி காண்போம்.
#5 கிரஹாம் போர்ட்

கிரஹாம் போர்ட் முன்னாள் இலங்கை பயிற்சியாளர் மற்றும் தற்போதைய அயர்லாந்து பயிற்சியாளர் ஆவார். பயிற்சியாளராக மாறுவதற்கு முன்பாக கிரஹாம் போர்ட் தென்னாப்பிரிக்காவின் "நடால்-B" என்ற அணிக்காக விளையாடி வந்தார். அவரது 29 வயது வரை வெறும் 7 முதல்தர போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். இந்த 7 போட்டிகளில் இவரது பேட்டிங் சராசரி 13.50 ஆகும். போர்ட் தனது 31 வயதில் "நடால் புரோவைன்ஸ்" அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இவர் பாப் வுல்மல்-ருக்கு துணை பயிற்சியாளராக 1999ல் நியமிக்கப்பட்டார். அந்த வருடத்தில் நடந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அதன்பின் பாப் வுல்மர் நீக்கப்பட்டு தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக கிரஹாம் போர்ட் நியமிக்கப்பட்டார்.
2007ல் கிரஹாம் போர்ட்-ற்கு இந்திய பயிற்சியாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக அதனை நிராகரித்துவிட்டார். இவர் இலங்கை அணியின் பயிற்சியாளராக 2012 மற்றும் 2016ல் பதவி வகித்துள்ளார். 2017ல் அயர்லாந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
#4 மிக்கி ஆர்தர்

மிக்கி ஆர்தர் உலக கிரிக்கெட்டில் ஒரு உணர்ச்சிகரமான பயிற்சியாளராக திகழ்ந்துள்ளார். ஆர்தர் பெரும்பாலும் அணியினருடன் தனது மகிழ்ச்சிகளையும் ஏமாற்றங்களையும் பகிர்ந்து கொள்வார். ஆர்தர் பயிற்சியாளர் என்ற கடினமான பணி-யை தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு அளித்துள்ளார். ஆர்தர் முதல் தர கிரிக்கெட்டில் சிறந்த அனுபவ வீரராக திகழ்ந்தவர். தென்னாப்பிரிக்காவைச் செர்ந்த இவர் 110 முதல் தர போட்டிகள் மற்றும் 150 லிஸ்ட்-ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார். முதல் தர போட்டிகளில் இவரது சராசரி 33.45 மற்றும் லிஸ்ட்-ஏ போட்டிகளில் 26.76 சராசரியையும் வைத்துள்ளார். எதிர்பாராத விதமாக இவருக்கு சர்வதேச அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2001ல் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இவர் பயிற்சியாளராக உருவெடுத்தார்.
4 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட தகராறில் 2010ல் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். பல சொதப்பல்கள் மற்றும் சர்ச்சைக்குரிய நேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக பதவி வகித்தார். அதன் பின் பாகிஸ்தான் அணிக்கு தலைமை பயிற்சியாளராக விளங்கினார். இவரது தலைமையில் பாகிஸ்தான் 2017ல் நடந்த ஐசிசி சேம்பியன் கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் டி20 தரவரிசையில் தொடர்ந்து நீண்ட மாதங்கள் பாகிஸ்தான் முதலிடத்தில் இருந்தது.
#3 ஜான் புச்சனன்

ஆஸ்திரேலிய அணி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முன்னணி அணியாக திகழ்ந்தபோது சர்வதேச அரங்கில் ஒரு போட்டியில் கூட விளையாடத ஒரு வீரர் பயிற்சியாளராக செயல்பட்டார் என்றால் அது ஆச்சரியப்பட வேண்டிய நிகழ்வாகும். இவர் ஒரு சுமாரான முதல் தர கிரிக்கெட் வீரர் ஆவார். 7 முதல் தர போட்டிகளில் குயின்ஸ்லாந்து அணிக்காக விளையாடிய இவர் 12.30 சராசரியுடன் 160 ரன்களை அடித்தார். இருப்பினும் ஒரு வீரராக சுமாரான புள்ளி விவரத்தை வைத்திருந்தாலும், ஒரு பயிற்சியாளராக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஜான் புச்சனன் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டபோது எளிதில் வீழ்த்த இயலாத அணியாக உலக அரங்கில் வலம் வந்தது. இவரது அற்புதமான பயிற்சியாளர் வாழ்க்கையானது ஆஸ்திரேலியா 2007ல் உலகக்கோப்பை வென்ற பின் முடிவுக்கு வந்தது. முன்னாள் வீரர்களான இயான் சேப்பல், சுனில் கவாஸ்கர் மற்றும் லெஜன்ட்ரி ஸ்பின்னர் ஷேன் வார்னே ஆகியோர் ஆஸ்திரேலியே அணியில் ஜான் புச்சனின் பங்களிப்பு என்ன என்று மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பி வந்தாலும், ஆஸ்திரேலிய அணியின் எழுச்சிக்கு இவரது அர்பணிப்பு என்றும் மறையாது. குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த இவர் ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஓய்வு பெற்றபின் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக திகழ்ந்தார். மேலும் 2011 மற்றும் 2013ல் நியூசிலாந்து கிரிக்கெட் இயக்குநராக வலம் ஜான் புச்சனன் வந்தார்.
#2 மைக் ஹேசன்

இவர் பயிற்சியாளராக மாறுவதற்கு முன்பாக ஒரு முதல் தர போட்டிகளில் கூட மைக் ஹேசன் பங்கேற்றதில்லை. கென்ய அணியில் ஒரு பதவி வகித்த ஹேசன் பின்னர் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு பணியில் அமர்த்தப்பட்டார். ஹேசன் நியூசிலாந்து அணியின் கேப்டனாக பிரன்டன் மெக்கல்லத்தை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனால் அந்த சமயத்தில் கேப்டனாக இருந்த ரோஸ் டெய்லருக்கும் மைக் ஹேசனுக்கும் இடையிலான நட்பு விரிசல் ஏற்பட்டது.
இருப்பினும் மைக் ஹேசனின் யோசனை சரியாக அமைந்து பிரண்டன் மெக்கல்லம் நியூசிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு பல போட்டிகளில் இந்த அணி வெற்றி பெற்றது. அத்துடன் 2015 உலகக்கோப்பையிலும் நியூசிலாந்து அசத்தியது. இதனால் முதல் முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த உலகக்கோப்பைக்கு பிறகும் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக இவர் செயல்பட்டார். 2019 உலகக்கோப்பை தொடருக்கு 1 ஆண்டு இருக்கும் முன்பாக 2018ல் இப்பதவியிலிருந்து விலகினார். நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக அதிக ஆண்டுகள் நிலைத்த ஒரே பயிற்சியாளர் மைக் ஹேசன். 44 வயதான இவர் 2019 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருந்தார். மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கும் போட்டி போட்டார்.
#1 ட்ரெவர் பேலிஸ்

ட்ரெவர் பேலிஸ் மட்டுமே ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை என இரண்டையும் வென்ற ஒரே பயிற்சியாளர். இவர் "நியூ சவுத் வெல்ஸ்" அணிக்காக 10 வருடங்களுக்கும் மேலாக விளையாடியுள்ளார். 58 முதல் தர போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 35.58 சராசரியை வைத்துள்ளார். 50 லிஸ்ட்-ஏ போட்டிகளில் பங்கேற்று 29.90 சராசரியை வைத்துள்ளார்.
இவரது பயிற்சியாளர் பதவி குறித்து பேசுகையில், 2007ல் ட்ரெவர் பேலிஸ், டாம் மூடிக்கு பின்னர் இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 4 வருடங்கள் இலங்கைக்கு பயிற்சியாளராக பதவி வகித்த இவர் அதன்பின் சிட்னி சிகஸர்ஸ், கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் போன்ற டி20 அணிகளின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ட்ரெவர் பேலிஸ் தலைமையில் சிட்னி சிகஸர்ஸ் 2011-12 பிக்பேஷ் தொடரையும், கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் ஐபிஎல் தொடரில் 2012 மற்றும் 2014 தொடரை வென்றது. 2015ல் அதிகம் மதிப்பிடப்பட்ட ட்ரெவர் பேலிஸ் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஜொலிக்க ட்ரெவர் பேலிஸ் முக்கிய காரணமாக இருந்துள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை செய்தது. 2019 ஆஸஷ் தொடருக்கு பின்னர் ட்ரெவர் பேலிஸ் பதவி விலக உள்ளார்.