3-வது டி20-யில்  இந்தியாவின் வெற்றி... சமூகவலைதளங்களில் தெறிக்கும் பதிவுகள்...

Australia v India - T20
Australia v India - T20

சிட்னி ஆடுகளத்தில் போட்டிகள் நடைபெற்றால் எப்பொழுதுமே ஆரவாரத்திற்கு பஞ்சமிருக்காது. அதேபோல் இன்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியிலும் அதே ஆராவாரத்திற்கு பஞ்சமில்லாமல் இருந்தது. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டி20யில் ஆஸ்திரேலிய அணி டி.எல். முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்திலும் , மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டி20 மழை காரணமாக ரத்தும் செய்யப்பட்டது. ஆதலால் 3வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்துள்ளது.

இந்திய வீரர்கள் இத்தொடரில் சிறப்பாக விளையாடி டி20தொடரை மிகுந்த ஆரவாரத்துடன் முடித்து வைத்துள்ளனர். தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அடித்த 165 ரன்களை இந்திய அணி 2 பந்துகள் மீதமிருக்கும் போது இலக்கை அடைந்து ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை சமன் செய்துள்ளது. இப்போட்டியை விராட் கோலி சிறப்பாக அரைசதம் விளாசி முடித்து வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணி பவர்பிளே முடியும் வரை விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை சேர்த்தது. பவர்பிளேக்கு பிறகு பந்து வீசிய குல்தீப் யாதவ் தனது சுழற்பந்து வீச்சினால் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அதே யுக்தியை பின்பற்றிய குருனால் பாண்டியா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். சுழற்பந்து வீச்சில் மட்டும் 5 விக்கெட்டுகள் மொத்தமாக வீழ்த்தப்பட்டது. இறுதியாக ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை 20 ஓவரில் எடுத்தது.

ஆஸ்திரேலியா அணிக்கு பதிலடி தரும் விதமாக இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். பின்னர் 5 மற்றும் 6வது ஓவரில் இரண்டு பேருமே தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதற்குப் பிறகு களமிறங்கிய கோலி மற்றும் கே.எல்.ராகுலின் ஜோடி ஆட்டத்தை முடித்து வைப்பர் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கே.எல்.ராகுல் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். ரிஷப் ஃபன்ட் தனது முதல் பந்தில் தேவையில்லாத ஷாட்டினால் விக்கெட்டை இழந்தார். இறுதியில் தினேஷ் கார்த்திக் மற்றும் கோலியின் ஜோடி ஆட்டத்தை முடித்து வைத்தனர்.

ரன் விவரம்

ஆஸ்திரேலியா - 164/6 (20), (ஷார்ட்-33, ஆரோன் ஃபின்ச் - 28, கேரே - 27 , ஸ்டாய்னிஸ் - 25*. குருனால் பாண்டியா 4/36 , குல்தீப் 1/19)

இந்தியா - 168/4 (19.4), ( கோலி -61*, தவான்- 41, தினேஷ் கார்த்தி -22*, ஜம்பா - 1/22, மேக்ஸ்வெல்- 1/25)

குருனால் பாண்டியா - ஆட்ட நாயகன்:

இப்போட்டியில் என்னுடைய அர்ப்பனிப்பை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.முதல் டி20யில் என்னுடைய சொதப்பலான ஆட்டத்திற்கு பிறகு அதிக பயிற்சியில் ஈடுபட்டேன். இப்போட்டியில் ஒவ்வொரு விக்கெட்டுகளும் எனக்கு மிகவும் பிடித்ததாக அமைந்தது.ஏனெனில் முதல் டி20யில் என்னுடைய பந்துவீச்சை அடித்து நொறுக்கியதால் என்னால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் போனதே இதற்கு காரணம் ஆகும். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் சிறப்பு என்னவென்றால் அனைத்து வீரர்களும் தங்களது முழு திறனை இன்றைய ஆட்டத்தில் வெளிபடுத்தியதுதான்.

ஷிகர் தவான்- தொடர் ஆட்ட நாயகன்:

இந்திய ரசிகர்கள் எங்களுக்கு அளித்த ஆதரவு மற்றும் அன்பு மட்டுமே எங்களை இப்போட்டியில் வெற்றி பெற செய்தது. ஆடுகளத்தில் இந்திய ரசிகர்களின் ஆதரவு மிகவும் அதிகமாகவே இருந்தது. இந்த ஆதரவு டெஸ்ட் தொடரிலும் தொடர வேண்டும் என விரும்புகிறேன். பேட்ஸ்மேனாக அதிக ரன்களை குவிக்கும் போது மிகுந்த பெருமையாக உள்ளது. இந்த தொடர் மிகவும் சிறப்பாக இருந்தது.

தற்பொழுது சமூக வலைதளங்களில் இந்திய அணியின் வெற்றியை தெறிக்கவிட்ட சில பதிவுகளை பற்றி காண்போம்.

மைக்ஹல் வாஹன்

இர்ஃபான் பதான்

ஆகாஷ் சோப்ரா

ஹர்பஜன் சிங்

ராஜ்நீஷ் குப்தா

போரியா மஜும்தார்

பாரத் சீர்வி

ஜடின் சப்ரு

மோகன்தாஸ் மேனன்

Quick Links

Edited by Fambeat Tamil