இந்தியாவில் கிரிக்கெட் பெரிய திருவிழா போல ஒவ்வொரு முறையும் கொண்டாடபடுகிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் பல ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் பல ஆண்டுகளாக இந்தியாவிற்கு விளையாடுவதைப் பார்ப்பதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பாக்கியம் பெற்றுள்ளனர். இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து பல திறமையான இளம் வீரர்களை இந்தியா உருவாக்கியுள்ளது.
பயமில்லாமல் பேட் செய்வது என்றாலே உடனே நம் மனதில் உதிக்கும் வீரர் வீரேந்தர் ஷேவாக்காக தான் இருக்க முடியும். பொதுவாக, ஆட்டத்தின் தொடக்கத்தில் பேட்ஸ்மேன்கள் மைதானத்தின் தன்மையை அறிந்து கொள்ள பொறுமையாக ஆடத்தொடங்கி ஒரு சில பந்துகளை எடுப்பார்கள். ஆனால், ஷேவாக் விஷயத்தில் அவர் மிகவும் வித்தியாசமான ஒரு வகையான பேட்ஸ்மேன் ஆவார். அவர் தனது முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்புவார். அனைத்து பேட்ஸ்மேன்களும் அவர்களது கிரிக்கெட் வாழ்வில் 300 ரன்களை அடிப்பதில்லை. மேலும் 300 ரன்களை சிக்சர் மூலம் அடிப்பதில்லை. அந்த திறமைகளை கொண்டவர் ஷேவாக்.
பிரண்டன் மெக்கல்லம், கிறிஸ் கெய்ல், ஆபிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ் ஆகியோர் உலகில் அச்சமற்ற ஆட்டக்காரர்களாக கருதப்படுபவர்கள். இவர்கள் பேட்டிங் அடிப்படையில் மிகவும் அனுபவமுள்ள வீரர்கள். இந்தியாவும் அச்சமற்ற ஆட்டக்காரர்களாக கருதப்படும் சில இளம் வீரர்களை உருவாக்கியுள்ளது. உலகின் சிறந்த பந்து வீச்சாளர்கள் தனது பந்துவீச்சால் நிலைகுலைய செய்ய முற்படும் போது, இந்த இளம் வீரர்கள் தனது அபாரமான பயமற்ற பேட்டிங் திறமையால் பந்து வீச்சாளர்களை தடுமாற செய்யும் வல்லமை படைத்தவர்கள். அப்படிப்பட்ட திறமை கொண்ட 3 இளம் இந்திய வீரர்களை பற்றி இப்போது பார்க்கலாம்.
# 3 ப்ரித்வி ஷா
18 வயதான ப்ரித்வி ஷா மும்பையில் நடைபெற்ற ஹாரிஸ் ஷீல்டு போட்டியில் 546 ரன்கள் எடுத்து ரசிகர்களின் பார்வையை ஈர்த்தார். அவரது அசாதாரண திறமையை பார்த்து 35 லட்சம் மதிப்புள்ள ஒப்பந்தத்தை எஸ்.ஜி. அவருக்கு வழங்கியது. ப்ரித்வி ஷா அவரது பயமற்ற பேட்டிங் மற்றும் அவரது பேட்டிங் நுட்பங்களால் சச்சின் டெண்டுல்கரின் வாரிசாக கருதப்படுகிறார்.
2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்-ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் காலின் முன்ரோ மற்றும் ஜேசன் ராய் ஆகியோர் சரியாக விளையாடாத காரணத்தால் ப்ரித்வி ஷா அவரது திறமைகளை உள்நாட்டு கிரிக்கெட்டின் மிகச்சிறந்த இடத்தில் வெளிபடுத்த வாய்ப்பு கிடைத்தது. பல வானவேடிக்கை இன்னிங்ஸ் விளையாடி முன்ரோ மற்றும் ராய் ஆகியோருக்கு பதிலாக ப்ரித்வி ஷா அணியின் துவக்க ஆட்டகாரராக மாறி அசத்தினார். இந்த சிறிய வயதில் மிகவும் அச்சமற்ற பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.
2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது. தான் பங்கேற்ற முதல் டெஸ்ட் இன்னிங்க்ஸ்ல் 19 பவுண்டரிகள் உட்பட 154 பந்துகளில் 134 ரன்கள் அதிரடியாக குவித்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸ்ல் 53 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து சேவாக்கின் ஆட்ட பாணியை நினைவு படுத்தினார். அடுத்த சச்சின், அடுத்த சேவாக் என்று முன்னாள் வீரர்களால் பாராட்டப்பட்டு வருகிறார். இந்தியாவின் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேனாக வருங்காலத்தில் வலம் வருவார் ப்ரித்வி ஷா.
# 2 ரிஷப் பன்ட்
பெரும்பாலும் 'அடுத்த ஆடம் கில்கிறிஸ்ட்' என்று கருதப்படும் பன்ட் ஹரித்வாரில் பிறந்தவர். மைதானத்திற்கு வந்தவுடன் பவுண்டரிகள் அடிப்பதில் சிறந்தவர். 2016 உலகக் கோப்பையில் இந்திய U-19-ல் ஆடிய ரிஷப் பன்ட், நேபாளம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 பந்துகளில் 75 ரன்களை எடுத்து தொடரின் அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். அவர் அடுத்த போட்டியில் ஒரு சதத்தை அடித்தார்.
இளம் வயதில் அனைத்து விதமான உயர்வையும் தாழ்மையையும் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்து இருந்தார். ஆனால் அவர் ஒருபோதும் தன் பாணியில் இயற்கையான விளையாட்டை தொடர்வதை கைவிடவில்லை. 2018 ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடிய பன்ட், முக்கியமான ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 34 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.
இந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தடுமாறினாலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். அந்த போட்டியில் 146 பந்துகளில் 114 ரன்களை அதிரடியாக குவித்தார். அடுத்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அவரின் சராசரி 92. அதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தினார். இரண்டு ஒரு நாள் போட்டிகளில் பேட் செய்துள்ள அவரின் ஸ்ட்ரைக் ரேட் 132. இதனால் அவர் இந்திய அணியின் முக்கிய இளம் வீரராக உருவெடுத்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்து கொண்டிருக்கிறது.
# 3 சஞ்சு சாம்சன்
கேரளாவைச் சேர்ந்த மற்றொரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். தனது தாக்குதல் ஆட்டத்தின் மூலம் அறியபடுபவர். ஓரளவு ஆட்டம் தனக்கு சாதகமானதாக அமைந்தவுடன் அனல் பறக்கும் ஷாட்களை அடிப்பார்.
ஐபிஎல் 2013-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் சிறப்பாக செயல்பட்டு கவனத்தை ஈர்த்தார். அதன் காரணமாக அடுத்த ஆண்டும் அணியில் தக்க வைக்கப்பட்டார். UAE-ல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்தார். ராகுல் டிராவிட் உடன் நல்ல இணைப்பில் இருந்தார். பின்னர் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்த போது அந்த அணியில் இடம் பெற்றார். புனே அணிக்கு எதிரான போட்டியில் 63 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். அணியின் மூன்றாவது அதிகபட்ச ரன்கள் எடுத்து தனது திறமையை நிருபித்தார்.
2018 ஐ.பி.ல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முக்கிய வீரர்களில் ஒருவராக சஞ்சு சாம்சன் கருதப்பட்டார். சில அனல் பறக்கும் ஷாட்கள் மூலம் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை தெறிக்க விட்டார். ஐ.பி.ல். போட்டிகளில் இது வரை 76 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 127. அவர் தனது ஆட்டத்தை மேம்படுத்தி வருகிறார். விரைவில் அவருக்கு தேசிய அணியில் தொடர்ச்சியாக நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
சென்ற தலைமுறைக்கு சச்சின் டெண்டுல்கர், இந்த தலைமுறைக்கு விராத் கோலி போல, வரும் தலைமுறைக்கு இவர்களும் நம்பிக்கை நட்சித்திரமாக திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.