# 3 சஞ்சு சாம்சன்
கேரளாவைச் சேர்ந்த மற்றொரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். தனது தாக்குதல் ஆட்டத்தின் மூலம் அறியபடுபவர். ஓரளவு ஆட்டம் தனக்கு சாதகமானதாக அமைந்தவுடன் அனல் பறக்கும் ஷாட்களை அடிப்பார்.
ஐபிஎல் 2013-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் சிறப்பாக செயல்பட்டு கவனத்தை ஈர்த்தார். அதன் காரணமாக அடுத்த ஆண்டும் அணியில் தக்க வைக்கப்பட்டார். UAE-ல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்தார். ராகுல் டிராவிட் உடன் நல்ல இணைப்பில் இருந்தார். பின்னர் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்த போது அந்த அணியில் இடம் பெற்றார். புனே அணிக்கு எதிரான போட்டியில் 63 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். அணியின் மூன்றாவது அதிகபட்ச ரன்கள் எடுத்து தனது திறமையை நிருபித்தார்.
2018 ஐ.பி.ல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முக்கிய வீரர்களில் ஒருவராக சஞ்சு சாம்சன் கருதப்பட்டார். சில அனல் பறக்கும் ஷாட்கள் மூலம் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை தெறிக்க விட்டார். ஐ.பி.ல். போட்டிகளில் இது வரை 76 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 127. அவர் தனது ஆட்டத்தை மேம்படுத்தி வருகிறார். விரைவில் அவருக்கு தேசிய அணியில் தொடர்ச்சியாக நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
சென்ற தலைமுறைக்கு சச்சின் டெண்டுல்கர், இந்த தலைமுறைக்கு விராத் கோலி போல, வரும் தலைமுறைக்கு இவர்களும் நம்பிக்கை நட்சித்திரமாக திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.