சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சேர போவது யார் ?

Enter caption
CSK CHAMPIONS 2018

இந்தியாவில் மிகப் பிரபலமான ஒரு தொடர் தான் ஐபிஎல்.உள்நாட்டு வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் பங்கு பெறும் இந்தத் தொடர் உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளது.வெற்றிகரமாகப் பத்து வருடங்களைத் தாண்டித் தற்போது பதினோராவது தொடருக்காக ஆயத்தம் ஆகி கொண்டிருக்கிறது.வீரர்கள் ஏலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைத்து அணிகளும் தங்களுது அணியிலிருந்து விடுவிக்கும் வீரர்கள் விவரத்தை வெளியிட வேண்டும். நவம்பர் 15 கடைசி நாளாகச் சொல்லப்பட்டு அனைத்து அணிகளும் தங்களுது அணியிலிருந்து சில வீரர்களை வெளியில் அனுப்பினர்.யுவராஜ் சிங், மிட்செல் ஸ்டார்க், ஷிகர் தவான், கெளதம் கம்பீர், ப்ரண்டன் மெக்கல்லம், டுமினி போன்ற நட்சத்திர வீரர்களை அந்த அந்த அணி அகற்றியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து இங்கிலாந்து பவுலர் மார்க் உட் இந்திய இளம் வீரர்கள் கணிஷ்க் செத் மற்றும் கிஷிட்ஸ் ஷர்மா மூவரையும் விடுவித்தது.நியூசிலாந்து வீரர் சான்ட்னர் இந்தத் தொடருக்குச் சென்னை அணிக்கு விளையாடுவதால் சென்னை அணி தங்களுது அதிகபட்சமான 8 வெளிநாட்டு வீரர்களை இப்பொழுதே பெற்றுவிட்டது.ஆதலால் இனி வெளிநாட்டு வீரர்களைச் சென்னை அணியால் வாங்க இயலாது.

சென்னை அணியின் வெளிநாட்டு வீரர்கள் வருமாறு:

1.வெய்ன் பிராவோ

2.ஷேன் வாட்சன்

3.இம்ரான் தாஹிர்

4.லுங்கி நிகிடி

5.டேவிட் வில்லி

6.பாப் டு பிளிசிஸ்

7.சான்ட்னர்

8.சாம் பில்லிங்ஸ்

தற்போது சென்னை அணி இந்திய அணி வீரர்களையே நாடி உள்ளது.ராயுடு வாட்சன் ரெய்னா தோனி பிளசிஸ் போன்ற அபாயகரமான டாப் ஆர்டர் இருப்பதால் அதைப் பற்றிச் சென்னை அணி கவலை கொள்ள தேவையில்லை. சென்னை அணி தோனிக்கு பிறகு இறங்க ஒரு சிறந்த வீரரைத் தேடி கொண்டிருக்கிறது.கேதார் ஜாதவ் இருந்தாலும் அவர் அவ்வபோது தனது கால் வலியால் அவதிபட்டு வருகிறார்.சென்ற முறை கூட ஒரு போட்டியில் மட்டுமே களம் இறங்கினார்.ஆதலால் அந்த இடத்திற்கு சென்னை அணி சிறந்த நபரைத் தேர்வு செய்யும்.

அந்த இடத்துக்கு யாரை எடுக்கலாம்:

சென்னை அணியில் முதல் இலகு யுவராஜ் சிங் ஆகத் தான் இருக்கும்.உலக கோப்பை ஹீரோ ஆன இவரைவிட அந்த இடத்துக்குச் சிறந்த வீரர் கிடைக்க மாட்டார்.தற்பொழுது சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் தோனி தலைமையில் அவர் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புள்ளது.இவரின் வருகை அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும்.ரெய்னா தோனி யுவராஜ் நமது பழைய இந்திய அணிபோல் சென்னை அணியைப் பார்க்கச் சென்னை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.மேலும் இந்த இடத்திற்கு மனோஜ் டிவாரி, நமன் ஓஜா, சர்ஃபிராஸ் கான் போன்றவர்களைக் கூட எடுக்கலாம்.அல்லது நமது அணியில் உள்ள துருவ் ஷோரேவை கூட ஆடவைக்கலாம்.ஆனால் அதன் பிறகு களம் காண பிராவோ வில்லி ஜடேஜா போன்ற வீரர்கள் இருப்பதால் சென்னை அணிக்கு அது ஒரு பிரச்சினையே கிடையாது.

சென்னை அணியின் பெரிய பிரச்சினை ஒரு சிறந்த இந்திய பந்து வீச்சாளர் இல்லை என்பதே. சர்டுள் தாகுர் சென்ற ஆண்டு எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வில்லை என்றே சொல்ல வேண்டும்.தீபக் சஹார் சிறப்பாகச் செயல்பட்டதால் தாகூர் சொதப்பியது பெரிதாகச் சென்னை அணியைப் பாதிக்கவில்லை.ஆனால் இந்த முறை சஹார் உடன் இணைந்து செயல்பட ஒரு நல்ல இந்திய பந்து வீச்சாளர் தேவை.ராஜஸ்தான் அணி உணத்கட்டை(Jaydev Unadkat) வெளி ஏற்றி உள்ளது.கடந்த முறை சென்னை ராஜஸ்தான் அவருக்காகக் கோதாவில் இறங்கி இறுதியில் ராஜஸ்தான் அணி அவரைப் பெரிய தொகைக்கு வாங்கியது.அவரை இந்த முறை சென்னை எடுக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.மேலும் சென்னை அணி அந்த இடத்திற்கு மோஹித் ஷர்மா வினய் குமார் போன்ற வீரர்களை எடுக்கலாம்.மற்ற அணிகளில் அவர்கள் சோபிக்க தவறினாலும் தோனியின் கீழ் சிறப்பாகச் செயல் பட வாய்ப்பு உள்ளது.இல்லை என்றால் சிறப்பாகச் செயல் படும் இந்திய இளம் வீரர்கள் எவரேனும் ஒருவரை எடுக்கலாம்.

சென்னை அணியின் சிறந்த 11:

1. ஷேன் வாட்சன்

2. அம்பதி ராயுடு

3. சுரேஷ் ரெய்னா

4. தோனி

5. யுவராஜ் சிங்

6. பிராவோ

7. ஜடேஜா

8. சான்டனர் அல்லது வில்லி அல்லது தாஹிர்

9. தீபக் சஹார்

10. லுங்கி நிகிடி

11. ஜெய்தேவ் உனட்கட்

இது ஒரு சிறந்த அணியாக இருக்கும்.யார் இருந்தால் என்ன கோப்பையை எப்படி வெல்வதென்று தோனிக்கு தெரியும்.தல தோனி சின்ன தல ரெய்னா இருக்கும்வரை சென்னை அணியை வெல்லவது கடினம்.ஏலத்தில் பார்ப்போம் என்ன மாற்றம் நடக்க போகிறது என்று.அதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு #விசில்போடு

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now