சிட்னி டெஸ்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் கருப்பு கை பட்டைகள் அணிந்திருந்தது ஏன் ?

Black arm band wearing both Teams
Black arm band wearing both Teams

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது மற்றும் தொடரை தீர்மானிக்கும் டெஸ்ட் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இந்திய அணி தனது முதல் நாள் ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளது. டாஸ் வென்றது இந்திய அணிக்கு பெரும் சாதகமாக அமைந்துள்ளது.

இன்று இரு அணியினரும் போட்டி ஆரம்பிக்கும் முன் தேசிய கீதம் பாட வரும் போது தங்களது கைகளில் கருப்பு கைபட்டைகளை அணிந்து வந்ததை நாம் அனைவரும் பார்த்திருக்கக் கூடும். பொதுவாக கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாட்டினருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் இறப்பிற்காகவோ அல்லது அவர்களுடைய நாட்டிற்கு சம்பந்தப்பட்ட எந்தவொரு துரதிருஷ்டவசமான நிகழ்வோ நடைபெற்றால் இது போன்ற கருப்பு கைபட்டைகளை அணிந்து வருவர்.

ஆஸ்திரேலிய , இந்திய அணி வீரர்கள் ஏன் இன்று கருப்பு கைபட்டைகளை அணிந்து வந்தனர் ?

முன்னாள் இந்திய பயிற்சியாளர் ராமகாத் ஆச்ரேகர் நேற்று இயற்கை எய்தினார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய அணி வீரர்கள் கருப்பு கைப்பட்டைகளை இன்று அணிந்து வந்தனர்.

சிட்னி டெஸ்ட் ஆரம்பிப்பதற்கு 5 மணி நேரத்திற்கு முன் ராமகாந் ஆச்ரேகர் மண்ணுலகை விட்டு விண்ணுலகை அடைந்தார். இவர் சச்சின் டெண்டுல்கர் போன்ற சில மிகப்பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு பயிற்சியாளராக செயல்பட்டார். ஆச்ரேகர் தனது கடைசி மூச்சு வரை மும்பையிலே வாழ்ந்தார்.

86 வயதான ஆர்ஜ்ரேகர் வயது முதிர்சியினால் சில இன்னல்களை சில நாட்களாக அனுபவித்து வந்தார். நேற்று மாலை ஆர்ஜ்ரேகர் இறந்ததை அவரது உறவினர்கள் உறுதி செய்தனர். ஆச்ரேகர் நம்மை விட்டு சென்று சென்று விட்டார் , எனவும் நேற்று மாலை இறந்து விட்டதாவும் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு கின் ரேஷ்மி தால்வி கூறினார்.

திரு.ராமகாந் ஆச்ரேகர் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய அணி வீரர்கள் கருப்பு கைப்பட்டைகளை இன்று சிட்னியில் நடைபெறும் டெஸ்ட்டில் அணிந்து விளையாடுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பிசிசிஐ, துரோனாச்சாரியா விருது வென்ற திரு. ராமகாந் ஆச்ரேகர் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது. இவர் சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியது மட்டுமல்லாமல் , சிறந்த மன்தநேயம் கொண்ட பயிற்சியாளர்கள் ஆவார். இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்களை உருவாக்கியதில் இவரது பங்கு மகத்தானது என பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் இவரது இறப்பு பற்றி தெரிவித்துள்ளது.

ஆச்ரேகர் ஒரு கட்டிடக்கலை நிபுணர். அவரது தொழிலுக்கு பின் முன்னாள் சிறந்த மும்பை கிரிக்கெட் வீரர்களான , வினோத் காம்ளி, பல்வீந்தர் சிங் ஷாது, அஜித் அகர்கர் மற்றும் ஷமீர் தீகே போன்றோரை உருவாக்கியதில் இவரது பங்கு மகத்தானது ஆகும்.

இதற்கிடையில் , ஆஸ்திரேலியா அணி வீரர்களும் கருப்பு கைப்பட்டைகளை அணிந்து வந்திருந்தனர். ஏனெனில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மற்றும் நியு சவுத் வேல்ஸ் பேட்ஸ்மேனான பில் வாட்சன் சமீபத்தில் தனது 87வது வயதில் இயற்கை எய்தினார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கருப்பு கைப்பட்டைகளை அணிந்து வந்திருந்தனர்.

Quick Links

Edited by Fambeat Tamil