ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் "விஜய் சங்கர்"-ரை ஏன் ஆடும் XI-ல் சேர்க்க வேண்டும்

Vijay Shankar
Vijay Shankar

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் இடம்பெற்றுள்ளார். இத்தொடரில் இரு அணிகளுமே தலா ஒரு போட்டிகளில் வென்றுள்ளன. 3வது மற்றும் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியானது மெல்போர்ன் மைதானத்தில் ஜனவரி 18 அன்று நடைபெறவுள்ளது. விஜய் சங்கர், இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக தற்போது உள்ள ஹர்திக் பாண்டியா-விற்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா சில காரணங்களால் இந்திய அணியிலிருந்து ஒருநாள் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே நீக்கப்பட்டார். விஜய் சங்கர் முதல் ஒருநாள் போட்டி முடிவடைந்த பின்னரே இந்திய அணியில் இணைந்தார்.

பாண்டியா இல்லாததால் இந்திய அணி நிறைய சிரமங்களை சந்தித்து வருகிறது. இந்திய அணி தற்போது 5 பௌலர்களுடனே களமிறங்குகிறது. முதல் இரு ஒருநாள் போட்டிகளிலுமே 6வது பௌலிங் என அணியில் யாருமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஐந்து பௌலர்களுடன் களமிறங்குவது எப்போதுமே ஆபத்தானது ஆகும். ஒரு பௌலரின் பௌலிங்கில் அதிக ரன்கள் சென்றாலே ஆட்டமே முற்றிலும் மாறி விடுகிறது. இது அடிலெய்டில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமான பந்துவீச்சாளர் முகமது சிராஜ்-ற்கு பொருந்தும். அந்த போட்டியில் புவனேஸ்வர் குமார், விராட் கோலி, தோனி இல்லையேல் ஆட்டம் முற்றிலும் மாறியிருக்கும்.

விஜய் ஷங்கர் இலங்கையில் நடந்த நிதாஷா டிராபி-யின் சொதப்பல்களுக்குப் பிறகு இந்திய-ஏ அணியில் இணைந்து கடந்த 6 மாதங்களாக சிறப்பாக ஆட்டத்திறனை வெளிபடுத்தி வருகிறார். தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் சமிபத்தில் நியூசிலாந்து-ஏ அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய-ஏ அணியில் 4 விக்கெட்டுகள் மற்றும் 80 பந்துகளில் 87 ரன்களை குவித்து நியூசிலாந்து வைத்த இலக்கை அடைய உதவினார். அத்துடன் இவருடைய பௌலிங் எகனாமி ரேட் ஒரு‌ ஓவருக்கு 5 ரன்களுக்கும் குறைவாகவே உள்ளது.

இதைத்தொடர்ந்து மீண்டும் இதே இடத்தில் மற்றோரு அருமையான ஆட்டத்திறனை வெளிபடுத்தினார் விஜய் ஷங்கர். 56 பந்துகளில் 59 ரன்களை அடித்து நியூசிலாந்து வைத்த இலக்கை அடைய உதவினார். அத்துடன் தொடரின் கடைசி போட்டியில் 42 பந்துகளில் 43 ரன்களை குவித்து இந்திய அணிக்கு ஒரு சிறந்த ரன்களை மொத்தமாக வைத்து தொடரை வெல்ல மிகவும் உதவியாக இருந்தார். நியூசிலாந்து-ஏ ற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய-ஏ அணியில் அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையை பெற்றார். ஸ்ரேயஸ் ஐயர், சுப்மன் கில், மயான்க் அகர்வால், இஷான் கிஷான் போன்ற சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் இருந்தும் நியூசிலாந்து-ஏ எதிரான தொடரில் அதிக ரன்களை குவித்துள்ளார் விஜய் சங்கர்.

விஜய் சங்கர் , ஹர்திக் பாண்டியா-வை விட ஒரு ஸ்ட்ராங்கான பேட்ஸ்மேன். பேட்டிங் வரிசை 5 அல்லது 6ல் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிபடுத்தும் திறமை கொண்டவராக உள்ளார். இவ்வளவு திறமை வாய்ந்த வீரரை மெல்போர்ன் ஆடுகளத்தில் நடைபெறவுள்ள தொடரை தீர்மானிக்கும் போட்டியில் இந்திய-XI ல் சேர்க்கலாம். இது ஒரு சரியான முடிவாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அமையும்.

விராட் கோலி இவரது ஆட்டத்திறனை வைத்து இந்திய அணியில் தேர்ந்தேடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் அவ்வளவாக சோபிக்கவில்லை . எனவே இரண்டு பேரில் ஒருவருக்கு மூன்றாவது ஓடிஐ போட்டியில் இந்திய-XIல் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் , முதல் இரு போட்டிகளில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாமல் இருந்த நாதன் லயானை அணியிலிருந்து நீக்கி அவருக்கு பதிலாக ஜம்பா -வை அணியில் சேர்த்துள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களாளும் பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் 6வது பந்துவீச்சாக விஜய் சங்கர் அல்லது கேதார் ஜாதவ் சேர்க்ப்படுவார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். விராட் கோலி-யின் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரையும் வென்றால் ஆஸ்திரேலியாவில் இரு தொடரையும் வென்ற முதல் கேப்டன் என்ற ஒரு மிகப்பெரிய சாதனை கோலி படைப்பார். இதுவரை எந்த அணியுமே இச்சாதனையை ஆஸ்திரேலியாவில் செய்தது இல்லை.

எழுத்து: சுசில்

மொழியாக்கம்: சதீஸ்குமார்

Quick Links

App download animated image Get the free App now