இந்திய அணியானது உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூஸிலாந்து அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியதால் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. அப்போது விராட் கோலி கேப்டன் பதவியில் நீடிக்க கூடாது என்ற கருத்து எழுந்தது அதைக்காட்டிலும் பெரிய கருத்தாக முன்வைக்கப்பட்டது இந்தியாவின் பயிற்சியாளரை மற்ற வேண்டும் என்பதே. தற்போது உலகக்கோப்பை தொடரில் தோல்வியடைந்த பெரும்பாலான அணிகள் தங்களுக்கான பயிற்சியாளரைகளை மாற்றி வருகிறது. அந்தவகையில் தற்போது இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்க உள்ளது பிசிசிஐ. அதற்காக பல விண்ணப்பங்களும் வந்துள்ளன. இந்நிலையில் ரவி சாஸ்திரி-யை ஏன் பயிச்சியாளர் பதவியிலிருந்து உடனடியாக மாற்ற வேண்டியதின் அவசியத்தை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
இந்திய அணி என்பது பந்தயத்தில் பங்கேற்கும் கார் போன்றது. அது சரியாக கவனிக்கப்பட்டு அதில் ஏற்படும் குறைகளை கண்டறிந்து அதனை நீக்கி காரில் டீசலை முழுமையாக நிரப்பி, செல்ல வேண்டிய இலக்கை சரியாக நிர்ணயித்து சென்றால் மட்டுமே போட்டியில் வெற்றி காண முடியும். அதை போல அணியில் உள்ள குறைகளை கண்டறிந்து அதற்க்கான சரியான நடத்துனரை நிர்ணயித்தால் மட்டுமே போட்டிகளை வென்று கோப்பையை கைப்பற்ற முடியும்.
இந்திய அணியானது 2015 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. அதே போல இந்தாண்டு நடைபெற்ற தொடரிலும் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. அதுமட்டுமல்லாமல் 2016 டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியில் மேற்கிந்திய தீவுகளிடம் தோல்வியடைந்தது. இதற்கான காரணம் என்ன. திறமையான வீரர்கள் இருந்தாலும் சரியான தலைமை இல்லாததே.
இந்திய அணியை பொறுத்தவரையில் முதலில் பயிற்சியாளராக நியமிக்கபட்டவர் அணில் கும்ப்ளே தான். ஆனால் அவருக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையேயான கருத்து வேறுபாடே ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்க காரணமானது. ரவி சாஸ்திரி இந்தியாவின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதன் பின் இந்தியா மூன்று உலககோப்பைகள் மற்றும் ஒரு சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் பங்கேற்றுள்ளது. ஆனால் எதிலும் இந்திய அணியால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.
தற்போதைய இந்திய அணியில் விராட் கோலியே மூன்று வகையான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்தாண்டு நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றிருத்த வீரர்களில் தினேஷ் கார்த்திக் மற்றும் தோணியை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்த உலகக்கோப்பை வரை அணியில் நீடிப்பார்கள். அதுபோக இளம் வீரர்கள் பலருக்கு இந்திய அணி வாய்ப்பளித்து வருகிறது. அவர்களுக்கும் சரியான வழிநடத்துனர் இருந்தால் தான் அவர்களும் ஜொலிக்க முடியும். அடுத்த பயிற்சியாளரை நியமிக்கும் போது அவரின் பயிற்சிவிக்கும் விதம் அணிக்கு உதவலாம்.
தற்போது உலகக்கோப்பை தொடரில் தோல்வியடைந்த பெரும்பான்மையான அணிகள் தங்களது பயிற்சியாளர்களை மாற்றி வருகிறது. சமீபத்தில் இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கபட்டு நியூஸிலாந்து அணிக்கெதிரான தொடருக்காக தாற்காலிக பயிற்சியாளர் நியமிக்கபட்டுள்ளார். அதேபோல தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளரையும் அணி நிர்வாகம் மாற்ற முடிவெடுத்துள்ளது. பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அவர்களின் பயிற்சியாளரை கண்டிப்பாக மாற்ற உள்ளோம் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய அணி நிர்வாகமும் ரவி சாஸ்திரியை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்குவதில் எந்த வித தவறும் இல்லை.
டாம் மூடி, மகிலா ஜெயவர்த்தனே போன்ற அனுபவமிக்க வீரர்களும் இந்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதால் அவர்களுக்கும் ஒருமுறை வாய்ப்பளித்து பார்க்கலாம்.