ஒரு அணியின் சிறந்த பேட்ஸ்மேன் தான் அணியை வழி நடத்த சிறந்த தலைவர் என்று கூறுவது தவறு. எம்.எஸ்.தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியபிறகு அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டார். இருப்பினும், கோஹ்லி தலைமையின் செயல்பாடுகள் பல விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. அவருக்கு நேர்மாறாகத் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா, தனது அமைதியாலும், பண்பாலும் ஒரு சிறந்த தலைவராக இருக்க முடியும் என்பதை நிரூபித்து வருகிறார். மேலும் அவரது அணியிலிருந்து சிறந்ததை பெறுகிறார் என்பது தான் அவரின் ஸ்பெஷல்.
ரோகித் கோஹ்லியை விட ஏன் சிறந்த கேப்டனாக இருக்கிறார் என்பதை ஆய்வு செய்வோம்.
அணி தேர்வு:
கலீல் அஹ்மத் தனது முதல் போட்டியில் ஹாங்ஹாங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். ஆனால் அந்தப் போட்டியில் புவனேஸ்வர் குமார் சரியாக ஆடவில்லை. பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்கள் எடுத்து ஆட்டநாயகனாக அறிவிக்கபட்டார் புவனேஸ்வர் குமார்.
ரோஹித் சர்மா புவனேஷ்வருக்கு ஆதரவளித்தார். மறுபுறம், கோஹ்லி, சக வீரர்களின் செயல்பாடுகளை ஆராய்வதில் பொறுமை இல்லாதவராகவே காணபட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கோஹ்லி தேர்வு செய்த அணி பலருடைய விமர்சனத்துக்கு ஆளானது. அதுவே இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்கு வீழ்ச்சியைத் தேடி தந்தது.
கடுமையான சூழ்நிலைகளைக் கையாளுதல்:
ரோகித் சர்மா எப்போதுமே கடினமான சூழ்நிலைகளைக் கையாள முடியும் என்பதை நிரூபித்துள்ளார். முக்கியமான கட்டங்களில் அவரது முடிவுகள் எப்போதும் அவரது அணிக்கான முடிவை மாற்றியிருக்கிறது. மறுபுறம், நெருக்கடி நிலைமைகளில் கோஹ்லி அடிக்கடி அமைதியற்றவராகத் தோன்றுகிறார். தற்போதைய கேப்டன் கோஹ்லி, முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி போன்றோரின் வழிகட்டுதலில், அவரது கருத்துக்களை கேட்டும் நடக்கலாம். ராஞ்சியின் சிறந்த விக்கெட் கீப்பிங்-பேட்ஸ்மேன் தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதியை நெருங்கிக் கொண்டிருகிறார் என்பதை கோஹ்லி புரிந்து கொள்ள வேண்டும்.
பெரிய போட்டிகளில் வென்ற அனுபவம்:
ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்தபோது மூன்று முறை IPL பட்டத்தை வென்றுள்ளார். ரைஸிங் புனேவுக்கு எதிரான ஆட்டத்தில் 128 ரன்களை மட்டுமே எடுத்தது மும்பை இந்தியன்ஸ். ஆனால் அந்த ஸ்கோரை வைத்து IPL போட்டி இறுதி ஆட்டத்தை வென்றது. மறுபுறம், கோஹ்லியின் தலைமையில் இதுவரை எந்த ஒரு பெரிய ஆட்டத்தையும் வென்றது இல்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கோஹ்லின் தலைமையில் இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தும் தோல்வி அடைந்து உள்ளார்கள். சாம்பியன்ஸ் ட்ராபி 2017-ல், பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியது. அதனால், ரோஹித் கோஹ்லியை விடச் சிறந்த இடத்தில் உள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை.
வீரர்களின் திறமையான பயன்பாடு:
2007-ல், இந்திய அணி தோனி தலைமையின் கீழ் 20 உலககோப்பை வென்றது. போட்டியில் வெற்றி பெரும் எனத் தோனி தலைமையிலான இளம் இந்திய அணியை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றிக்கான முக்கிய காரணம் கேப்டன் மூலம் வீரர்களின் சிறந்த செயல்பாடுகளைக் கொண்டு வரும் திறமையாகும்.
ஒவ்வொரு வீரரின் நம்பிக்கையும் அவர் அதிகரித்து, தேவைக்கேற்ப அவற்றைப் பயன்படுத்தினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் உலக தர வரிசையில் சிறந்த வீரர்கள் இருந்தாலும், ஐபிஎல் பட்டத்தைப் பெறவில்லை. அவர்களின் தோல்விக்குப் பிரதான காரணம் தலைமை. ஒரு கேப்டன் முக்கிய வேலை, ஒரு வீரரின் சிறந்த பயன்பாட்டைச் சரியாகப் பயன்படுத்துதல். ஒரு வீரரின் வலிமையைத் தீர்மானிப்பதற்கு அவர் தவறிவிட்டால், அந்த வீரரை ஒழுங்காகப் பயன்படுத்த முடியாது. விராத் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். ஆனால் அவர் தனது கேப்டன் பொறுப்பில் ஐ.பி.ல். போட்டிகளில் சரியாகச் செயல்படவில்லை. மறுபுறம், ரோஹித் ஷர்மாவின் அணி சராசரி வீரர்களைக் கொண்டது. ஆனால் அவர் ஒவ்வொருவரின் திறமை மற்றும் வலிமையை சரியாக தெரிந்துள்ளார். அதனால்தான் மும்பை இந்தியன்ஸ் மூன்று முறை பட்டத்தை வென்றது.
வெற்றி சதவீதம்:
கிறிஸ் கெய்ல், மிட்செல் ஸ்டார்க், ஏ பி டி வில்லியர்ஸ் மற்றும் விராத் கோஹ்லி போன்ற வீரர்கள் இருந்த போதிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் வெற்றி சதவீதம் 48.17 ஆகும். மறுபுறத்தில், மும்பை இந்தியன்ஸ் வெற்றி சதவீதம் 57.01. சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பிறகு இரண்டாவது மிக உயர்ந்த வெற்றி சதவீதம் இது. இந்த இரண்டு சாதனை அணிகளின் சிறப்பு அணியின் தலைவர்களையே குறிப்பிடுகிறது.
எழுத்து: அனஸ் மோகன் ஜா
மொழியாக்கம்: நிவேதா ராஜகோபால்