மேற்கு இந்திய தீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது . இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை மிகவும் மோசமாக தோற்கடித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி. முதல் போட்டியில் வெற்றியுடன் மேற்கு இந்திய தீவுகள் அணியும் இங்கிலாந்து அணி முதல் போட்டியில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் களம் இறங்கியது. இரண்டாவது டெஸ்ட் போட்டி மேற்கு இந்திய தீவில் உள்ள ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் தடுமாற்றதுடன் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 187 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் பின்னர் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் முன்வரிசை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். மேற்கு இந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் வலுவான நிலைக்கு முன்னேறியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணியில் பிராவோ மற்றும் ஹெட்மயர் களத்தில் இருந்ததனர்.
முன்றாம் நாள் ஆட்ட நேரத்தொடக்கத்தில் ஹெட்மயர் 21 ரன்னில் மோயின் அலி பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய டௌரிச் 31 ஸ்டுவர்ட் ப்ராட் பந்தில் அவுட் ஆகினார். கேப்டன் ஹோல்டர் 22 ரன்னில் ஆன்டர்சன் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ரோச் 7 ரன்னில் ஆன்டர்சன் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ஜோசப் 7 ரன்னில் அவுட் ஆகினார். முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்திய தீவுகள் அணி 306 ரன்னில் அனைத்து விக்கெட்களை இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி இங்கிலாந்து அணி தொடக்கத்தில் இருந்து சரிய தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் ஜொ டென்லி இருவரும் களம் இறங்கினர். பர்ன்ஸ் 16 ரன்னில் ஹோல்டர் பந்தில் அவுட் ஆகினார். டென்லி 17 ரன்னில் ஜோசப் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய பேர்ஸ்ரோவ் 14 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ரூட் 7 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ஸ்டோக்ஸ் 11 ரன்னில் ரோச் ஓவரில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய மோயின் அலி 4 ரன்னில் ரோச் ஓவரில் அவுட் ஆகினார். பின்னர் வந்த நிலைத்து விளையாடிய பட்லர் 24 ரன்னில் ஹோல்டர் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் கண்ட ஃபோக்ஸ் 13 ரன்னில் ரோச் ஓவரில் அவுட் ஆகினார். இதனை அடுத்து இளம் கண்ட ப்ராட் மற்றும் ஆன்டர்சன் டக் அவுட் ஆகினர். மேற்கு இந்திய தீவுகள் அணியில் ரோச் 4, ஹோல்டர் 4, ஜோசப் 2, விக்கெட்களை வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 132 அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு இங்கிலாந்து அணி 17 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. மேற்கு இந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் ப்ராத்வெய்ட் மற்றும் கேம்பல் இருவரும் இரண்டு ஓவரிலேயே வெற்றி பெற்றனர். ஆட்ட நாயகனாக கெமர் ரோச் தேர்வு செய்யப்பட்டார். மேற்கு இந்திய தீவுகள் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.