நான்காவது ஒரு நாள் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த கெய்ல் மற்றும் பட்லர்

Pravin
பட்லர் மற்றும் கிரிஸ் கேய்ல்
பட்லர் மற்றும் கிரிஸ் கேய்ல்

இலங்கிலாந்து அணி மேற்கு இந்திய தீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகள் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது ஒரு நாள் போட்டி மழையால் ரத்தானது. இந்த நிலையில் நான்காவது ஒரு நாள் போட்டி நேற்று மேற்கு இந்திய தீவில் உள்ள கிரெனடா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி இங்கிலாந்து அணியில் பேரிஸ்டோவ் மற்றும் அலேக்ஸ் ஹேல்ஸ் இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மோர்கன் 12வது சதம் (103)
மோர்கன் 12வது சதம் (103)

இருவரும் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களை சேர்த்தனர். பேரிஸ்டோவ் 56 ரன்னில் ஓஷென் தமாஸ் பந்தில் அவுட் ஆகினார். அதனை அடுத்து களம் இறங்கிய ரூட் 5 ரன்னில் ஓஷென் தாமஸ் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய கேப்டன் மோர்கன் நிலைத்து விளையாடிய நிலையில், அலேக்ஸ் ஹேல்ஸ் 82 ரன்னில் நர்ஷ் பந்தில் அவுட் ஆகினார். அதனை அடுத்து களம் இறங்கிய பட்லர் மோர்கனுடன் ஜோடி சேர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இருவரும் சிறப்பாக விளையாட இங்கிலாந்து அணியின் ஸ்கோர் விறுவிறுவென அதிகரித்தது. பட்லர் சிக்ஸர் மழை பொழிந்தார். மோர்கன் சதம் விளாசினார். ஒரு நாள் போட்டியில் 12வது சதத்தை பூர்த்தி செய்தார். மோர்கன் 103 ரன்னில் காட்ரெல் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து பட்லர் சதம் விளாசி அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய பட்லர் 150 ரன்களை குவித்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 418 ரன்களை குவித்தது.

பட்லர் 150 ரன்கள்
பட்லர் 150 ரன்கள்

இதை அடுத்து களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர்களாக கிரிஸ் கெய்ல் மற்றும் கேம்பல் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே 15 ரன்னில் கேம்பல் தனது விக்கெட்டை மார்க் வுட் பந்தில் இழந்தார். அதை அடுத்து களம் இறங்கிய ஷாய் ஹோப் 5 ரன்னில் மார்க் வுட் பந்தில் அவுட் ஆகினார். மறுபுறம் நிலைத்து விளையாடினார் கிறிஸ் கெய்ல். அதை அடுத்து களம் இறங்கிய டேரன் ப்ராவோ மற்றும் கிறிஸ் கெய்ல் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தியது. இருவரும் சிக்ஸர் மழை பொழிந்தனர். டேரன் ப்ராவோ 61 ரன்னில் மார்க் வுட் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து ஹெட்மைர் 6 ரன்னில் மார்க் வுட் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த கேப்டன் ஹோல்டர் 29 ரன்னில் அடில் ரஷித் பந்தில் அவுட் ஆகினார்.

கிறிஸ் கெய்ல் (162) 14 சிக்ஸர்கள்
கிறிஸ் கெய்ல் (162) 14 சிக்ஸர்கள்

நிலைத்து விளையாடிய கிறிஸ் கெய்ல் 162 ரன்கள் வீளாசி அதில் 14 சிக்ஸர்களை அடித்து ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆகினார். அவரை அடுத்து களம் இறங்கிய ப்ராத்வெய்ட் அதிரடியாக அரைசதம் வீளாசினார். அவருடன் விளையாடிய நர்ஷ் 43 ரன்கள் குவித்து ரஷித் பந்தில் இருவரும் அவுட் ஆகினார். இறுதியில் மேற்கு இந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 389 ரன்களை அடித்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மார்க் வுட் 4, ரஷித் 5, ஸ்டோக்ஸ் 1 விக்கெட்களை வீழ்த்தினர். இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

App download animated image Get the free App now