இங்கிலாந்து அணி மேற்கு இந்திய திவீற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மேற்கு இந்திய தீவில் உள்ள செயிண்ட்.லூசியா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடி இங்கிலாந்து அணி 277 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 79 ரன்களையும் பட்லர் 67 ரன்களையும் அடித்தனர். மேற்கு இந்திய தீவுகள் அணியில் ரோச் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதன் பின்னர் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து விச்சில் மேற்கு இந்திய தீவுகள் அணியை எளிதில் சுருட்டியது. இங்கிலாந்து அணியில் மார்க் வுட் 5 விக்கெட்களை வீழ்த்தினார். மோயின் அலி 4 விக்கெட்களையும் வீழ்த்தினார். இதனை அடுத்து இரண்டாம் இன்னிங்ஸை விளையாட தொடங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் முடிவில் 19 ரன்களை எடுத்திருந்தது.
நேற்று மூன்றாம் நாள் தொடக்கத்தில் ரோரி பரன்ஸ் 10 ரன்னில் தனது விக்கெட்டை கீரோன் பால் பந்தில் இழந்தார். இதனை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி வீரர் ஜொ டென்லீ நிலைத்து நின்று விளையாடினர். அவருடன் இணைந்து விளையாடிய கீட்டன் ஜென்னிங்ஸ் 23 ரன்னில் ஜோசப் பந்தில் அவுட் ஆகினார். அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த இங்கிலாந்து அணி 73-2 விக்கெட் என்ற இக்கட்டான நிலையில் இருந்த போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் களம் இறங்கினர். ஜோ ரூட்டுடன் இணைந்த ஜொ டென்லீ சிறப்பான பாட்னர்ஷிப் கொடுத்து விளையாடினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த இங்கிலாந்து அணி சற்று வலுவான நிலைக்கு முன்னேறியது. சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜொ டென்லீ 69 ரன்களில் கேப்ரியல் பந்தில் டௌரிசிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார்.

இதனை அடுத்து களம் இறங்கிய பட்லர் ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்து இங்கிலாந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். இருவரும் அரைசதம் அடிக்க இங்கிலாந்து அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய பட்லர் தேனீர் இடைவேளிக்கு பிறகு, 56 ரன்களில் ரோச் பந்து விச்சில் அவுட் ஆகினார். இங்கிலாந்து அணி 254-4 என்ற நிலையில் இருந்த போது களம் இறங்கிய ஸ்டோக்ஸ் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

சிறப்பாக விளையாடி ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இந்த தொடரில் ஜோ ரூட் அடித்த முதல் சதம் இதுவாகும். இது ரூட்டின் 16 வது டெஸ்ட் சதம் ஆகும். இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 325 ரன்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது. மேற்கு இந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை விட 448 ரன்கள் பின்தங்கியுள்ளது.