ஓய்வை அறிவித்த பிறகு வெளுத்து வாங்கிய கிரிஸ் கெய்ல் 

Pravin
கிரிஸ் கெய்ல் 135 ரன்கள்
கிரிஸ் கெய்ல் 135 ரன்கள்

இங்கிலாந்து அணி மேற்கு இந்திய தீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-1 என்ற கணக்கில் மேற்கு இந்திய தீவுகள் அணி தொடரை வென்றது. இந்த நிலையில் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி மேற்கு இந்திய தீவில் உள்ள பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அதிரடி வீரர் கிரிஸ் கெய்ல் மீண்டும் ஒரு நாள் போட்டி அணியில் களம் இறங்கினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர்களாக கிரிஸ் கெய்ல் மற்றும் ஜோன் கேம்பல் இருவரும் களம் இறங்கினர்.

தொடக்கத்தில் அதிரடி காட்டிய கேம்பல் 30 ரன்னில் கிரிஸ் வோக்ஸ் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய ஷாய் ஹோப் நிலைத்து விளையாடி மறுமுனையில் அடித்து நொருக்கினார் கிரிஸ் கெய்ல், அவர் ஒருபுறம் சிக்ஸர் மழை பொழிந்தார், மறுமுனையில் அதிரடி காட்டிய ஹோப் அரைசதம் அடித்து 64 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய சிமரோன் ஹெத்மயர் 20 ரன்னில் கிரிஸ் வோக்ஸ் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய அறிமுக வீரர் நிகோலஸ் பூரன் டக் அவுட் ஆகினார். அடுத்த களம் இறங்கிய டேரன் ப்ராவோ அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடி காட்டிய கிரிஸ் கெய்ல் தனது 24வது சதத்தை வீளாசினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு களம் இறங்கிய கிரிஸ் கெய்ல் தனது அதிரடியில் மிரட்டினார். அதனை தொடர்ந்து அதிரடி காட்டிய டேரன் ப்ராவோ 40 ரன்னில் அடில் ரஷிது பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து கேப்டன் ஹொல்டர் 16 ரன்னிலும், ப்ராத்வெய்ட் 3 ரன்னிலும் அவுட் ஆகினர். 50 ஒவர்கள் முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி 360 ரன்களை குவித்தது.

ஜேசன் ராய் ஏழாவது சதம்
ஜேசன் ராய் ஏழாவது சதம்

இதனை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோவ் இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடிராக விளையாடி இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 91 ரன்களை சேர்த்தது. பேர்ஸ்டோவ் 34 ரன்னில் ஹொல்டர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்த களம் இறங்கிய ரூட் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த ஜோடி மீண்டும் அடுத்த விக்கெட்டிறகு பெரிய ஸ்கோரை சேர்த்தது.

ஜோ ரூட் 14வது சதம்
ஜோ ரூட் 14வது சதம்

ஜேசன் ராய் சதம் வீளாசினார். 123 ரன்கள் எடுத்த ராய் தேவேந்திர பிஷூ பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த கேப்டன் மோர்கன் நிலைத்து விளையாட இங்கிலாந்து அணியின் வெற்றி உறுதியானது. ரூட் சதம் வீளாசி 102 ரன்னில் ஹொல்டர் பந்தில் அவுட் ஆகினார். இதனை அடுத்து மோர்கன் அரைசதம் வீளாசி 64 ரன்னில் அவரும் அவுட் ஆக இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இருவரும் கடைசியில் இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தனர். இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஜேசன் ராய் தேர்வு செய்யப்பட்டார்.

Edited by Fambeat Tamil