மேற்கு இந்திய தீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி நேற்று மேற்கு இந்திய தீவில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி நேற்று முதல் நாள் ஆட்டத்தை தொடங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேற்கு இந்திய தீவுகள் அணியில் ஹோப், ஹட்மெயிர் , சேஸ் ஆகியோரின் அரைசதத்தால் நல்ல ஸ்கோர் எட்டியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி 264 ரன்களில் 8 விக்கெட்களை இழந்திருந்தது.
இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த மேற்கு இந்திய தீவுகள் அணியில் ஹட்மெயிர் 81 ரன்களை எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 289-10 ரன்களை எடுத்திருந்தது. இங்கிலாந்து அணியில் அதிக விக்கெட்களைஆன்டர்சன் 5, ஸ்டோக்ஸ் 4, மொயின் அலி ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்களாக ஜென்னிங்ஸ் மற்றும் பர்ன்ஸ் ஆகியோர் களம் இறங்கினர் . தொடக்கத்திலேயே சரிவை கண்டது இங்கிலாந்து அணி. 23 ரன்னில் முதல் விக்கெடை இழந்த இங்கிலாந்து அணியின் ஜென்னிங்ஸ் 17 ரன்னில் ஹோல்டர் பந்தில் விக்கெடை இழந்து சரிவை தொடங்கி வைத்தார் . பின்னர் நிலைத்து நின்ற பர்ன்ஸ் 26 பந்துகளை சந்தித்து 2 ரன்களை மட்டும் எடுத்து ரோச் பந்தில் விக்கெட்டை இழந்தார். பேர்ஸ்டோவ் 17 பந்தில் 12 ரன்கள் எடுத்திருந்தபோது ரோச் பந்தில் அவுட் ஆகினார் . பின்னர் அவரை தொடர்ந்து ரூட்டும் 4 ரன்னில் ஹோல்டர் பந்தில் விக்கெட் இழந்தார் . அவரை தொடர்ந்து ஸ்டோக்ஸ் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார் .
ரோச் வீசிய அதே ஓவரில் மொயின் அலியும் டக் அவுட் ஆகினார். அவர்களை தொடர்ந்து பட்லர் 4 ரன்களிலும், போக்ஸ் 2 ரன்னிலும் தொடர்ந்து விக்கெட்களை இழந்து பெவுலியன் திரும்பினர் . சிறிது நேரம் தாக்குபிடித்த சாம் க்ரான் 14 ரன்னில் கெப்ரியல் பந்தில் விக்கெட்டை இழந்தார். அடில் ரஷித் 12 ரன்னில் ஜோசப் பந்தில் விக்கெட் இழந்தார். இங்கிலாந்து அணி 77 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தடுமாறி நின்றது. இந்த ஸ்கோர் வெஸ்ட் இண்டிஸிற்கு ஏதிராக நான்காவது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். மேற்கு இந்திய தீவு அணியில் ரோச் 5 , கோல்டர் 2, ஜோசப் 2, கேப்ரியல் 1 விக்கெடுகளை வீழ்திதனர்.
மேற்கு இந்திய தீவுகள் அணி இங்கிலாந்தை விட 212 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. அதன் படி களம் இறங்கிய ப்ரத்வெயிட் மற்றும் செம்பெல் இருவரும் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். ப்ரத்வெயிட் 24 ரன்களில் மொயின் அலி பந்தில் அவுட் ஆகினார். செம்பெல் 33 ரன்னில் ஸ்டோக்ஸ் ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். இந்த நிலையில் பின்னர் வந்த ஹோப் 3, சேஸ் 0, ப்ராவோ 1 ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். பின்னர் வந்த டவ்ரிச் 27 ரன்களுடனும் கேப்டன் கோல்டர் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை விட 339 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் 2 , மொயின் அலி 3, சாம் க்ரான் 1 விக்கெட்களை வீழ்த்தினர்.