வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து முதல் டெஸ்ட் நாள் 1 ரிப்போர்ட் 

Pravin
இங்கிலாந்து அணியினர் விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடினர்
இங்கிலாந்து அணியினர் விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடினர்

மேற்குஇந்தியதீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல்போட்டி நேற்று மேற்குஇந்தியதீவில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்து வலுவான அணியாக டெஸ்ட் போட்டிகளில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே இந்தநிலையில் மேற்குஇந்தியதீவுகள் அணியை எளிதில் வென்றிடமுடியும் என நினைத்தாலும் மேற்குஇந்தியதீவுகள் அணி சொந்தமண்ணில் எளிதில் வெற்றிபெற செய்ய முடியாது என கருதப்படுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்குஇந்தியதீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியில் அனுபவ வீரர்கள் ஆன ஜோரூட் (கேப்டன்), பேர்ஸ்ரோ, ஸ்டோக்ஸ் , பட்லர் ,மோயின்அலி , ஆண்டர்சன், பொக்ஸ் , சாம்குர்ரான் , ஆடில்ரஷித் , புரூன்ஸ், ஜேன்னிங்ஸ். மேற்குஇந்தியதீவுகள் அணியில் ப்ரத்வெய்ட் , செம்பால், டேரன்பிராவோ, சாய்கோப், ஹட்மெயர், சேஸ், ஹோல்டர்(கேப்டன்), ரோட்ச், கெப்ரியல், சொசப்

மேற்குஇந்தியதிவுகள் அணியில் தொடக்க ஆட்டகாரர்களாக ப்ரத்வெயிட் மற்றும் செம்பால் ஆகியோர் களம் இறங்கினர் . தொடக்கதிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய மேற்குஇந்தியதீவுகள் அணி முதல் விக்கெடிற்கு 53 ரன்களை சேர்த்தது. செம்பால் 44 ரன்னில் மோயின் அலி பந்தில் lbw முறையில் அவுட்ஆகி வெளியேறினார். மிகவும் பொறுமையாக விளையாடிய ப்ரத்வேயிட் 130 பந்துகளை எதிர்கொண்டு 40 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ஹோப் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். ஆனால், டேரன் ப்ராவோ வந்த வேகத்தில் 2 ரன்னில் 5 பந்துகளை சந்தித்த நிலையில் ஸ்டோக்ஸ் ஓவரில் விக்கெட்டை இழந்தார் .

பின்னர் வந்த சேஸ், ஹோப்புடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹோப் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆன்டர்சன் பந்தில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ஹட்மெயிர், சேஸ்சுடன் சேர்ந்து பொறுமையாக விளையாடினார் . பின்னர் சேஸ் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆன்டர்சன் வேகத்தில் வீழ்ந்தார். பின்னர் வந்ந டூவீச் டக்அவுட் ஆகி வெளியேறினார் . ஆன்டர்சனின் வேகத்தில் மேற்குஇந்தியதீவுகள் அணி வீரர்கள் தொடர்ந்து விக்கெட்களை இழந்தனர் .

பேட்ஸ்மேன் பந்தை விளாசும் காட்சி : சேஸ்
பேட்ஸ்மேன் பந்தை விளாசும் காட்சி : சேஸ்

பின்னர் களம் கண்ட மேற்குஇந்தியஅணியின் கேப்டன் ஹோல்டர் 5 ரன்னில் ஆன்டர்சன் பந்தில் விக்கெட் இழந்தார். வேகத்தில் மிரட்டிய ஆன்டர்சன் 4 விக்கெட்களை தொடர்ந்து வீழ்த்தி அசத்தினார். பின்னர் முதல்நாளின் கடைசி நேரத்தில் களம் இறங்கிய ரோச் டக் அவுட்டானர் . ஸ்டோக்ஸ் இந்த விக்கெட்டுடன் சேர்த்து 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் மேற்குஇந்தியதீவுகள் அணி 264-8 என்ற நிலையில் இருந்தது. இந்த போட்டி இங்கிலாந்து அணியின் ஸ்டோக்ஸ் 50வது டெஸ்ட் போட்டியாகும் . இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஆன்டர்சன் 4, ஸ்டோக்ஸ் 3, மோயின் அலி 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஹெட்மயேர் அரைசதம் அடித்து களத்தில் நீடிக்கிறார்
ஹெட்மயேர் அரைசதம் அடித்து களத்தில் நீடிக்கிறார்

மேற்குஇந்தியாதீவுகள் அணியின் வசம் 2 விக்கெட்டுகள் உள்ளதால் 300 ரன்களை கடந்து ஒரு வலுவான ஸ்கோரை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இங்கிலாந்து அணியில் ப்ராட் நீக்கப்பட்டு கர்ரனுக்கு வாய்ப்பு தந்தது சர்ச்சையெழுந்துள்ளது.