மேற்கு இந்திய தீவீற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி மேற்கு இந்திய தீவில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது . இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய மேற்கு இந்திய தீவு முதல் இன்னிங்ஸில் 289-10 ரன்களை எடுத்தது. பின்னர் நேற்று இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது . 77 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் எழு வீரர்கள் ஒற்றை இலக்க எண்ணில் வெளியேறினர். மேற்கு இந்திய அணியில் ரோச் 5 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்தை பதற செய்தார். 212 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஹோல்டர் 7 ரன்னிலும் , டௌரிச் 27 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியல் கேப்டன் ஹோல்டரும் , டௌரிச் இருவரும் களம் இறங்கினர் . மூன்றாம் நாள் ஆட்டத்தை சிறப்பாக தொடங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி சொந்த மண்ணில் தங்களின் ஆட்டத்தினை இங்கிலாந்திற்கு காட்டியது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் டௌரிச் மற்றும் ஹோல்டரின் இணையை பிரிக்க முடியாமல் திணறியது இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹோல்டர் தனது 8 அரைசதத்தை அடித்தார் . டௌரிச் தனது டெஸ்டில் தனது 8 அரைசதத்தை பூர்த்தி செய்தார். இருப்பினும் இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . பின்னர் அதிரடியின் உச்சத்திற்கு சென்ற ஹோல்டர் தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் தொடர்ந்த இந்த அதிரடி அவர் இரட்டை சதத்தில் பூர்த்தி செய்து தனது முதல் இரட்டை சதத்தை விளாசினார்.
ஹோல்டர் 229 பந்துகளை சந்தித்து 202 ரன்களை விளாசினார். இதில் 28 பவுண்டரிகளும், 8 சிகஸ்களும் அடங்கும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டரின் அதிரடி இரட்டை சதத்தால் மிரண்டது இங்கிலாந்து அணி. டௌரிச் தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார். டுவிச் 116 ரன்களுடன் களத்தில் இருந்தார். 415-6 என்ற ரன்களை எடுத்த மேற்கு இந்திய தீவுகள் அணி டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணிக்கு 628 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி .
பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 628 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கியது . இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக பர்னஸ் மற்றும் ஜென்னிங்ஸ் இறங்கினர். இருவரும் நிலைத்து நின்று விளையாடினர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 56-0 ரன்களை எடுத்திருந்தது. ப்ர்னஸ் 39 ரன்களும் ஜென்னிங்ஸ் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி மேற்கு இந்திய தீவிகள் அணியை விட 572 ரன்கள் பின்தங்கி உள்ளது .