மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் இங்கிலாந்து அணி இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மேற்கு இந்திய தீவில் உள்ள பார்பாடாஸில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. இப்போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை தனது சொந்த மண்ணில் வீழ்த்தி உள்ளது. இங்கிலாந்தை முதல் இன்னிங்ஸில் 77 ரன்களில் சுருட்டியது மட்டும் இல்லாமல் மேற்கு இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 415 ரன்கள் பெற்றது. இங்கிலாந்து அணிக்கு மேற்கு இந்திய தீவுகள் அணி 628 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இதை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்கத்தில் களம் இறங்கிய ப்ர்னஸ் மற்றும் ஜென்னிங்ஸ் இருவரும் பெறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஜென்னிங்ஸ் 14 ரன்கள் எடுத்திருந்த போது ஜோசப் பந்தில் தனது விக்கெடை இழந்தார். பின்னர் களம் இறங்கிய பேர்ஸ்ரோவ் நிலைத்து விளையாடினர். ப்ர்னஸ் 84 ரன்னில் சேஸ் பந்தில் தனது விக்கெடை இழந்தார். 134-2 என்ற நிலையில் இங்கிலாந்து அணி ரூட் மற்றும் பேர்ஸ்ரோவ் இணை சிறிது நேரம் தாக்குபிடித்தது. பேர்ஸ்ரோவ் 30 ரன்னில் கெப்ரியல் பந்தில் தனது விக்கெடை இழந்தார். அதன் பின்னர் களம் இறங்கிய 22 ரன்கள் எடுத்த போது சேஸ் பந்தில் ப்ராவோவிடம் சேட்ச் கொடுத்து அவுட் ஆகினார் . 164-4 விக்கெட்களை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி . அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இருவரும் நிலைத்து விளையாடினர். இந்த ஜோடியை 50 ரன்கள் மேல் சேர்த்தது இதனை பிரிக்க வந்தார் சேஸ் . சேஸ் பந்தில் ஸ்டோக்ஸ் 34 ரன்னில் அவட் ஆகினார் . பின்னர் களம் இறங்கிய மோயின் அலி அதிர்ச்சி அளிக்கும் விதமாக டக் அவுட் ஆகி வெளியேறினார். சேஸ் வீசிய ஓவரில் டக் அவுட் ஆகினார். பின்னர் வந்த போகஸ் களம் இறங்கினார். பட்லர் 26 ரன்னில் சேஸ் பந்தில் தனது விக்கெடை இழந்தார் .
போகஸ் 5 ரன்னில் அதே சேஸ் பந்தில் அவுட் ஆகி வெளியாகினர். பின்னர் வந்த அடில் ரஹித் 1 ரன்னில் சேஸ் பந்தில் அவுட் ஆகினார் . சாம் க்ரான் 17 ரன்னில் சேஸ் பந்தில் அவுட் ஆகினார். இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 246 எடுத்தது. மேற்கு இந்திய தீவுகள் அணியை பொருத்த வரை பவுலிங்கில் சேஸ் 8 விக்கெட்களை வீழ்த்தினார். ஜோசப் ஒரு விக்கெட்டும் கெப்ரியல் ஒரு விக்கெடும் வீழ்த்தினர். மேற்கு இந்திய தீவுகள் அணி 381 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணியை 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹொல்டர் தேர்வு செய்யபட்டார் .