வெஸ்ட் இண்டிஸ் பந்து வீச்சில் வீழ்ந்தது இங்கிலாந்து அணி

Pravin
ஹோல்டர் மற்றும் காட்ரெல்
ஹோல்டர் மற்றும் காட்ரெல்

இங்கிலாந்து அணி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி ஆபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி மேற்கு இந்திய தீவில் உள்ள பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர்களாக கிறிஸ் கேய்ல் மற்றும் கேம்பல் இருவரும் களம் இறங்கினர்.

சிம்ரோன் ஹெத்மஏர் 104*
சிம்ரோன் ஹெத்மஏர் 104*

தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய இந்த ஜோடியில் கேம்பல் 23 ரன்னில், லியம் ப்ளங்கெட் பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய ஷாய் ஹோப் நிலைத்து விளையாட கிறிஸ் கேய்ல் அரைசதம் அடித்தார். கிறிஸ் கேய்ல் 50 ரன்னில் அடில் ரஷித் பந்தில் அவுட் ஆகினார். இவரை தொடர்ந்து களம் இறங்கிய டேரன் ப்ராவோ ஒரு பக்கம் நிலைத்து விளையாட ஷாய் ஹோப் 33 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் களம் இறங்கிய சிம்ரோன் ஹெத்மையர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அதிரடியில் ஆட்டத்தை வெளிபடுத்திய ஹெத்மியயர் அரைசதம் கடந்தார். டேரன் ப்ராவோ 25 ரன்னில் அடில் ரஷிதிடம் ரன்அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் ஹோல்டர் 3 ரன்னில் ராய் ரன்அவுட் செய்தார். இதை அடுத்து களம் இறங்கிய ப்ராத்வேய்ட் 13 ரன்னில் மார்க் வுட் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய ஹெத்மையர் கடைசி ஓவரில் சதம் அடித்து அசத்தினார். இது ஹெத்மையரின் ஓரு நாள் போட்டியின் 4வது சதம் ஆகும். மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவர் முடிவில் 289 ரன்களை அடித்தது.

இதை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் ஷெல்டன் காட்ரெல் பந்தில் பேஸ்ரோவ் டக் அவுட் ஆக ராய் 2 ரன்னில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ரூட் மற்றும் மோர்கன் சிறிது நேரம் தாக்குபிடிக்க ரூட் 36 ரன்னில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய ஸ்டோக்ஸ் நிலைத்து விளையாடினார். கேப்டன் மோர்கன் அரைசதம் வீளாசினார். மோர்கன் 70 ரன்னில் காட்ரெல் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடி ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து 79 ரன்னில் ஹோல்டர் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய பட்லர் சிறிது நேரம் தாக்குபிடித்து 34 ரன்னில் ஹோல்டர் பந்தில் அவுட் ஆகினார்.

வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர்கள்
வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர்கள்

அதற்கு அடுத்து களம் இறங்கிய டாம் குரான் முதல் பந்திலேயே டக் அவுடாகி வெளியேறினார். அதை அடுத்து களம் இறங்கிய மோயின் அலி மற்றும் ரஷித் சிறிது நேரம் நின்றனர். ரஷித் 15 ரன்னில் காட்ரெல் பந்தில் அவுட் ஆகினார். மோயின் அலி 12 ரன்னில் அவுட் ஆக இங்கிலாந்து அணி 263 ரன்களை மட்டும் அடித்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தொடரில் இரு அணிகளும் ஒரு போட்டிகள் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமனிலையில் உள்ளனர்.

Edited by Fambeat Tamil
Be the first one to comment