மேற்கு இந்திய தீவிற்கு சற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது . இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை மிகவும் மோசமாக தோற்கடித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி. முதல் போட்டியில் வெற்றியுடன் மேற்கு இந்திய தீவுகள் அணியும் இங்கிலாந்து அணி முதல் போட்டியில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் களம் இறங்கியது. இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி மேற்கு இந்திய திவில் உள்ள ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய இங்கிலாந்து அணியில்இரண்டு மாற்றங்களுடன் களம் கண்டது. ஜென்னிங்ஸ் பதிலாக டென்லியும், ரஷித் பதில் ஸ்டுவர்ட் ப்ராட் சேர்க்கப்பட்டனர்.
தொடக்க வீரர்களாக டென்லி மற்றும் பர்ன்ஸ் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே தடுமாறினர் இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டாக பர்ன்ஸ் 4 ரன்னில் ரோச் பந்தில் விக்கெட்டை இழந்து பெவுலியன் திரும்பினார். அவரோடு களம் இறங்கிய டென்லி 6 ரன்னில் ஜோசப் பந்தில் அவுட் ஆகினார். 16-2 என்ற நிலையில் இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோவ் களம் இறங்கினார். அவருடன் இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் களம் இறங்கிய வேகத்தில் 7 ரன்னில் அதே ஜோசப் ஓவரில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய பட்லர் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் 1 ரன்னில் ஹொல்டர் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய ஸ்டோக்ஸ் சிறிது நேரம் நின்றார். நிலைத்து விளையாடிய பேர்ஸ்டோவ் அரைசதத்தை கடந்து 52 ரன்னில் ரோச் பந்தில் அவுட் ஆகினார். ஸ்டோக்ஸ் 14 ரன்னில் கேப்ரியல் ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய மோயின் அலி மற்றும் போக்ஸ் இணை சிறிது நேரம் நிலைத்து நின்று ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய மோயின் அலி அரை சதத்தை கடந்தார். அவர் 60 ரன்னில் ரோச் பந்தில் அவுட் ஆகினார்.
போக்ஸ் 35 ரன்னில் கேப்ரியல் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய சாம் க்ரான் 6 ரன்னில் ரோச் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய ஆன்டர்சன் 1 ரன்னில் கேப்ரியல் ஓவரில் விக்கெட்டை இழந்தார். இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 187 ரன்களை எடுத்தது. மேற்கு இந்திய தீவுகள் அணியில் சிறப்பான பந்து விச்சாளர்கள் ரோச் 4 விக்கெட்டும், கேப்ரியல் 3, ஜோசப் 2, ஹொல்டர் 1, விக்கெட்களை வீழ்த்தினர்.
முதல் நாள் தேனீர் இடைவேளிக்கு பிறகு கடைசி 20 ஓவர்கள் இருந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ப்ராத்வேய்ட் மற்றும் சேம்பெல் களம் இறங்கனர். இருவரும் மேற்கு இந்திய திவுகள் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி 30-0 ரன்களை எடுத்தது. ப்ராத்வேய்ட் 11 ரன்னிலும், சேம்பெல் 16 ரன்னிலும் களத்தில் இருந்தனர். மேற்கு இந்திய தீவுகள் அணி இங்கிலாந்தை விட 157 ரன்கள் பின்தங்கி உள்ளது.