இலங்கிலாந்து அணி மேற்கு இந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டி மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடிய நிலையில், கடைசியாக மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி இன்று மேற்கு இந்திய தீவில் உள்ள செயிண்ட் லூசியா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த டி-20 தொடரில் மேற்கு இந்திய தீவுகள் அணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டி-20 அணியில் இணைந்தார் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல். இதனிடையே முதலில் களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர்களாக ஷாய் ஹோப் மற்றும் கிறிஸ் கெய்ல் இருவரும் களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில், ஷாய் ஹோப் 6 ரன்னில் டாம் குரான் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து ஹெத்மையர் களம் இறங்கினார்.
அதிரடி வீரர் கிறிஸ் கேய்ல் 15 ரன்களில் கிறிஸ் ஜார்டன் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து அடுத்ததாக களம் இறங்கினார் டேரன் ப்ராவோ. இதற்கிடையில், நிலைத்து விளையாடிய ஹெத்மையர் 14 ரன்களில் டாம் குரான் பந்தில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதை தொடர்ந்து களம் இறங்கிய நிகோலஸ் பூரான் நிலைத்து விளையாடினார். அதிரடியாக விளையாடிய டேரன் ப்ராவோ 28 ரன்னில் கிறிஸ் ஜார்டன் பந்தில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து நிகோலஸ் பூரான் அதிரடி காட்டினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ப்ராத்வெய்ட் டக் அவுட் ஆக மேற்கு இந்திய தீவுகள் அணி தடுமாறியது. அதன் பின்னர் களம் இறங்கிய பேபின் ஆலன் 8 ரன்னில் டென்லி பந்தில் அவுட் ஆகினார். அதனை அடுத்து நிலைத்து விளையாடி நிகோலஸ் பூரான் 58 ரன்னில் டாம் குரான் பந்தில் அவுட் ஆகினார். மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 160-8 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியில் டாம் குரான் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்.
இதை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் பேரிஸ்டோவ் மற்றும் அலேக்ஸ் ஹேல்ஸ் இருவரும் நிலைத்து விளையாடினர். அலேக்ஸ் ஹெல்ஸ் 11 ரன்னில் காட்ரெல் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய ஜோ ரூட் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் காட்ரெல் பந்தில் டக் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து கேப்டன் மோர்கன் 8 ரன்னில் ப்ராத்வெய்ட் பந்தில் அவுட் ஆக இங்கிலாந்து அணி தடுமாறியது. இருப்பினும் பேரிஸ்டோவின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி சென்றது. அவருடன் இணைந்த டென்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டென்லி 30 ரன்னில் ஹோல்டர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த பில்ங்ஸ் 18 ரன்னில் காட்ரெல் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய பேரிஸ்டோவ் 68 ரன்னில் அவுட் ஆக இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி இலக்கை அடைந்தது. 161-6 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக பேரிஸ்டோவ் தேர்வு செய்யபட்டார்.