இங்கிலாந்து அணியை சுருட்டி தொடரை சமன் செய்தது வெஸ்ட் இண்டிஸ்

Pravin
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டிஸ் கேப்டன்கள்
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டிஸ் கேப்டன்கள்

மேற்கு இந்திய தீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி போராடி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற மூன்றாவது ஒரு நாள் போட்டி மழையால் ரத்தானது. இதை தொடர்ந்து நான்காவது போட்டியில் பிரமாண்ட வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-1 என்று முன்னிலை பெற்ற நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று மேற்கு இந்திய தீவில் உள்ள ஸ்டலூசியா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் விளையாடியது மேற்கு இந்திய தீவுகள் அணி.

ஓஷேன் தாமஸ் 5 விக்கெட்
ஓஷேன் தாமஸ் 5 விக்கெட்

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்களாக பேரிஸ்டோவ் மற்றும் அலேக்ஸ் ஹேல்ஸ் தொடக்கத்தில் தடுமாறினர். பேரிஸ்டோவ் 11 ரன்னில் காட்ரெல் பந்தில் அவுட் ஆகினார். அவரை அடுத்து களம் இறங்கிய ஜோ ரூட் 1 ரன்னில் ஹோல்டர் பந்தில் அவுட் ஆகினார். அதனை அடுத்து களம் இறங்கிய கேப்டன் மோர்கன் சிறிது நேரம் நிலைக்க, மறுமுனையில் விளையாடிய ஹேல்ஸ் 23 ரன்னில் ப்ராத்வெய்ட் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து மோர்கன் 18 ரன்னில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இருவரும் சிறிது நேரம் தாக்கு பிடித்த நிலையில் ஸ்டோக்ஸ் 15 ரன்னில் ப்ராத்வெய்ட் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து மோயின் அலி 12 ரன்னில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகினார். அவரை அடுத்து வந்த அனைத்து வீரர்களும் டக் அவுட் ஆகினர். பட்லர் 23 ரன்னில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து வோக்ஸ், டாம் க்ரான், ஆடில் ரஷித் ஆகியோர் டக் அவுட் ஆகினர். மேற்கு இந்திய தீவுகள் அணியில் ஓஷேன் தாமஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 113 ரன்களை எடுத்தது.

கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

இதை தொடர்ந்து களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் கேம்பல் இருவரும் விளையாடினர். கேம்பல் 1 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ஷாய் ஹோப் சிறிது நேரம் தாக்கு பிடிக்க, கிறிஸ் கெயல் வழக்கமான அதிரடியை காட்டினார். சிக்ஸர் மழை பொழிந்த கிறிஸ் கெய்ல் அரைசதம் அடித்தார். 77 ரன்னில் கிரிஸ் கெய்ல் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய டேரன் ப்ராவோ மற்றும் ஹெத்மைர் இருவரும் அணியை வெற்றி பெற செய்தனர். இறுதியில் 115-3 ரன்களை அடித்து மேற்கு இந்திய தீவுகள் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் முலம் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now