பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் அதிரடியால் வலுவான நிலையில் இங்கிலாந்து

Pravin
Buttler and Stokes
Buttler and Stokes

மேற்கு இந்திய தீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிளும் வெற்றி பெற்று மேற்கு இந்திய தீவுகள் அணி தொடரை வென்ற நிலையில் நேற்று மேற்கு இந்திய தீவில் உள்ள ஸ்டலூசியா மைதானத்தில் கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹொல்டர் ஐ.சி.சி விதித்த தடையால் விளையாடவில்லை. அதற்கு பதில் பவுல் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அதே போல் இங்கிலாந்து அணியிலும் சாம் குரானுக்குப் பதில் மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டார். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் மேற்கு இந்திய தீவுகள் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் கீட்டன் ஜென்னிங்ஸ் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்தில் இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இருவரும் 16 ஓவர்கள் வரை பொறுமையாக விளையாட மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் கீமோ பால் 17 வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஜென்னிங்ஸ், டேரன் ப்ராவோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். இதனை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி வீரர் ஜொ டென்லீ நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடிக்க ரோரி பர்ன்ஸ் 29 ரன்னில் அதே கீமோ பால் ஓவரில் lbw முறையில் அவுட் ஆகினார். இவரை தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் சிறிது நேரம் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார் . சிறப்பாக விளையாடி ஜொ டென்லீ 20 ரன்னில் கேப்ரியல் பந்து வீச்சில் அவுட் ஆகினார்.

Buttler fifty
Buttler fifty

இதனை அடுத்து களம் இறங்கிய ஜோஸ் பட்லர் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த இங்கிலாந்து அணி சிறிது தடுமாற்றதுடன் விளையாடியது. 63-3 என்ற நிலையில் இங்கிலாந்து அணி தடுமாறிய நிலையில் இந்த ஜோடி சிறிது நேரம் தாக்குபிடிக்க ஜோ ரூட் 15 ரன்னில் ஜோசப் பந்தில் அவுட் ஆகினார். இங்கிலாந்து அணி 107-4 என்ற நிலையில் ஜோடி சேர்ந்த பட்லர் மற்றும் அடுத்து களம் இறங்கிய ஸ்டோக்ஸ் இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த இங்கிலாந்து அணி சற்று முன்னேற்றம் அடைந்தது. தேனீர் இடைவேளி வரை இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தியது. தேனீர் இடைவேளிக்கு பிறகு அடித்து ஆடத்தொடங்கி பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் இருவரும் தங்களது விக்கெட்டை இழக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

Stokes fifty
Stokes fifty

இந்த ஜோடியில் இருவரும் அரைசதத்தை கடந்து நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 231 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற வலுவாக நிலையில் உள்ளது. களத்தில் பட்லர் 67 ரன்களுடனும் ஸ்டோக்ஸ் 62 ரன்களுடனும் உள்ளனர்.

Edited by Fambeat Tamil