வெஸ்ட் இண்டிஸ் அணியை சுருட்டிய மார்க் வுட் மற்றும் மோயின் அலி

Pravin
Mark Wood
Mark Wood

மேற்கு இந்திய தீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட்களில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது மேற்கு இந்திய தீவு அணி. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மேற்கு இந்திய தீவில் உள்ள ஸ்டலூசியா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தொடரை இழந்த நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டி கட்டாயத்தில் உள்ளது இங்கிலாந்து அணி. இந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹொல்டர் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்போட்டியில் கேப்டனாக ப்ராத்வேய்ட் நியமிக்கப்பட்டுள்ளார். போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி இருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி வீரர்கள் பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் இருவரும் களம் இறங்கினர்.

முதல் நாளில் நிலைத்து விளையாடிய இந்த ஜோடி இரண்டாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே, பட்லர் 67 ரன்னில் கேப்ரியல் பந்தில் அவுட் ஆகினார். அவருடன் இணைந்து விளையாடி ஸ்டோக்ஸ் 79 ரன்னில் ரோச் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய பேஸ்ரோவ் 2 ரன்னில் வந்த வேகத்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய மோயின் அலி 13 ரன்னில் ஜோசப் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய மார்க் வுட் 6 ரன்னில் ரோச் பந்தில் அவுட் ஆகினார். ஆண்டர்சன் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகினார். இங்கிலாந்து அணி 277 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மேற்கு இந்திய தீவுகள் அணியில் ரோச் 4 விக்கெட்களையும் கேப்ரியல், ஜோசப், பால் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

Roach
Roach

இதனை அடுத்து களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர்களாக செம்பல் மற்றும் ப்ராத்வேய்ட் இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கதிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 57 ரன்கள் எடுத்த நிலையில் மோயின் அலி வீசிய பந்தில் இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். பின்னர் வந்த கோப் 1 ரன்னில் மார்க் வுட் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ரோஸ்டன் சேஸ் டக் அவுட் ஆகினார். டேரான் ப்ராவோ 6 ரன்னில் மார்க் வுட் பந்தில் அவுட் ஆகினார். மார்க் வுட் பந்தில் மேற்கு இந்திய தீவு அணி வீரர்கள் தடுமாறினர்.

Mark Wood 5 wicket
Mark Wood 5 wicket

பின்னர் வந்த ஹெட்மேயர் 8 ரன்னில் மார்க் வுட் பந்தில் அவுட் ஆகினார். கீரோன் பால் 9 ரன்னில் மோயின் அலி பந்தில் அவுட் ஆகினார். ஷேன் டௌரிச் நிலைத்து விளையாட ரோச் அவருடன் சேர்ந்து விளையாடினார். டௌரிச் 38 ரன்னில் டுவார்ட் ப்ராட் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ஜோசப் 2 ரன்னில் மோயின் அலி பந்திலும் கேப்ரியல் 4 ரன்னில் மார்க் வுட் பந்தில் அவுட் ஆகினார். அனைத்து விக்கெட்களையும் இழந்து மேற்கு இந்திய தீவுகள் அணி 154 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியை விட 121 ரன்கள் பின்தங்கி உள்ளது மேற்கு இந்திய தீவுகள் அணி. அதன்பிறகு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை எடுத்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.