மேற்கு இந்திய தீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதலில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணிலேயே வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது மேற்கு இந்திய தீவுகள் அணி. இங்கிலாந்து அணி தொடரை இழந்த நிலையில் கடைசி மற்றும மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 9 ம் தேதி மேற்கு இந்திய தீவில் உள்ள செயின்ட் லூசியா மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டயத்தில் விளையாடியது இங்கிலாந்து அணி. அதே போல் அணியிலும் சில மாற்றங்களுடன் களம் இறங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடி இங்கிலாந்து அணி 277 ரன்களை அடித்தது. அடுத்து விளையாடி மேற்கு இந்திய தீவுகள் அணி 154 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணியை விட 121 ரன்கள் முதல் இன்னிங்ஸிலேயே பின்தங்கி இருந்தது.
இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. களம் இறங்கிய அனைத்து வீரர்களும் தங்களிடன் சிறப்பான ஆட்டதை வெளிபடுத்த இங்கிலாந்து அணி வலுவான நிலைக்கு முன்னேரச் செய்தனர். இங்கிலாந்து அணியில் டென்லீ 69 ரன்களும், ஜோஸ் பட்லர் 54 ரன்களும், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 122 ரன்களும், ஸ்டோக்ஸ் 48 ரன்களையும் எடுத்து அசத்தினர். ரூட் தனது 16 வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 361-5 என்ற நிலையில் இருந்த போது டிக்ளேர் செய்வதாக முடிவு செய்தது. மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு இங்கிலாந்து அணி 484 ரன்களை இழக்காக நிர்ணயித்தது.
இதனை அடுத்து களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி தொடக்க வீரர்களாக கார்லோஸ் ப்ராத்வெய்ட் மற்றும் காம்ப்பெல் இருவரும் களம் இறங்கினர். செம்பால் வந்த வேகத்தில் ஆண்டர்சன் பந்தில் டக் அவுட் ஆகினார். ப்ராத்வேய்ட் அதே ஆண்டர்சன் பந்தில் 8 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய டேரன் ப்ராவோ ஆண்டர்சன் பந்தில் டக் அவுட் ஆகினார். மேற்கு இந்திய தீவுகள் அணி 10-3 விக்கெட்களை இழந்தது. இதனை அடுத்து களம் இறங்கிய ஷாய் ஹோப் 14 ரன்னில் மார்க் வுட் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ஹெட்மேயர் 19 ரன்னில் பேர்ஸ்டோவிடம் ரன் அவுட் ஆகினார். டௌரிச் சிறிது நேரம் தாக்குபிடித்து 19 ரன்னில் மோயின் அலி பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ரோச் நிலைத்து விளையாடினார். சேஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். நிலைத்து விளையாடிய சேஸ் அரைசதத்தை விளாசினார். ரோச் 29 ரன்களில் மோயின் அலி பந்தில் அவுட் ஆகினார்.
பின்னர் வந்த ஜோசப் 34 ரன்களை அடித்து தனது விக்கெட்டை மோயின் அலி பந்தில் பறிகொடுத்தார். கேப்ரியல் வந்த வேகத்தில் 3 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் வந்த கீரோன் பால் 12 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆகினார். அனைத்து விக்கெட்களையும் இழந்த மேற்கு இந்திய தீவுகள் அணி 252 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.