கதை என்ன ?
புளோரிடாவின் லாடர்ஹில்லில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் நிக்கோலஸ் பூரன் விக்கெட் பெற்ற பின் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியின் செயலுக்கு ஐசிசி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரது செயல்களுக்காக ஐ.சி.சி நடத்தை விதிகளின் முதல் நிலை மீறப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ எச்சரிக்கையைப் பெற்றுள்ளார்.
உங்களுக்குத் தெரியாவிட்டால்….
நிறைய எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் டி 20 ஐக்கு முன் தனது முதல் இந்திய தொப்பியை வழங்கினார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 தொடரில் நவுதீப் சைனியின் முதல் ஓவரிலே நிக்கோலஸ் பூரன் சிக்ஸ் விளாசினார். இதன் பின் வீசிய அடுத்த பந்திலே நவுதீப் சைனி நிக்கோலஸ் பூரனின் விக்கெட்டை பெற்றார். இதன் பின் களிமிறங்கிய ஹெட்மியரை டக் அவுட் செய்து தொடர்ந்து இரண்டு விக்கெட்களை பெற்றார். இதன் மூலம் தனது முதல் ஆட்டத்தின் முதல் 3 விக்கெட்களை பெற்று ஆட்டநாயகன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
கதைக்கரு
வெஸ்ட் இண்டீஸ் உடனான மூன்று டி20 தொடர்களில் முதல் தொடர் புளோரிடாவின் லாடர்ஹில்லில் நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் அறிமுகமான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, தன்னுடைய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில் நிக்கோலஸ் பூரானை 20 ரன்களில் வீழ்த்திய நவுதீப் சைனி அடுத்தப் பந்திலே ஹெட்மையரை டக் அவுட் செய்தார்.
இந்நிலையில் பூரன் விக்கெடாகும் முந்தைய பந்தில் சிக்ஸ் விளாசினார். இதனால் விக்கெட் இழந்த பூரனை நோக்கி நவுதீப் சைனி ஆக்ரோஷமாக இரு கைகளையும் பெவிலியன் பக்கம் உயர்த்தி, அங்கே செல்லுமாறு பூரானுக்குச் சைகை மூலம் தெரிவித்துள்ளார். நடுவர்கள் நைகல் டியுகிட் மற்றும் கிரிகோரி பிராத்வைட் ஆகியோர் நிலைமையை அமைதிப்படுத்த தலையிடுவதற்கு முன்பு பூரன் கோபமடைந்தார்..
நவுதீப் சைனியின் செயல் ஐசிசி விதிமுறைகளை மீறிய செயல் என்பதால் நடுவர்கள் சைனி மீது புகார் அளித்தார்கள். இதையடுத்து ஆட்ட நடுவர் ஜெஃப் குரோவ், சைனியின் செயலுக்கு ஓர் அபராதப் புள்ளியை வழங்கியுள்ளார். இதன்மூலம், முதல் சர்வதேச விக்கெட்டிலேயே ஐசிசி விதிமுறைகளை மீறி அபராதப் புள்ளியைப் பெற்றுள்ளார் நவுதீப் சைனி. அபராதப் புள்ளிகளை பெற்ற சைனி வேறு எந்தொரு போட்டிகளில் இருந்தும் விலக்கி வைக்கவில்லை. இருப்பினும் இவர் தனது முதல் போட்டியிலே 3 விக்கெட்களை பெற்று சிறப்பான தொடக்கத்தை தொடங்கியுள்ளார்.
அடுத்து என்ன ?
இந்திய அணி நடந்த முடிந்த 2 டி20 போட்டிகளிலும் வெற்றியை கண்டுள்ளது. இதையடுத்து மூன்றாவது போட்டி வருகின்ற ஆகஸ்ட் 6ம் தேதி குயானாவில் உள்ள புரோவிடென்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இரவு 8.00.மணி அளவில் தொடங்கும். இதையடுத்து 8ம் தேதி ஓடிஐ தொடர் தொடங்கவுள்ளது.