மேற்கிந்திய தீவுகள்
1) மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜான் கேம்பேல், எவின் லிவிஸ் ஆகிய இருவருமே சுழியத்தில் வீழ்த்தப்பட்டனர். ஒரு டி20 இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ரன் ஏதும் அடிக்காமல் வீழ்த்தப்பட்டது 15வது முறையாகும். இதற்கிடையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இரு தொடக்க ஆட்டக்காரர்களும் ரன் ஏதும் அடிக்காமல் ஒரு சர்வதேச டி20யில் வீழ்த்தப்பட்டது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று மௌன்ட் மானுஹாயில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான டி20யில் கிறிஸ் கெய்ல் மற்றும் சாத்வீக் வால்டன் ஆகிய இரு தொடக்க ஆட்டக்காரர்களும் சுழியத்தில் வீழ்த்தப்பட்டனர்.
2) மேற்கிந்தியத் தீவுகள் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. இதில் கீரன் பொல்லார்டால் குவிக்கப்பட்ட 49 ரன்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணி ரன்களின் 51.58 சதவீத ரன்களாகும். இதற்கு முன்னர் 2009 ஆண்டு ஜீன் 19 அன்று ஓவல் மைதானத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 101 ரன்கள் எடுத்தது. இதில் கிறிஸ் கெய்ல் 63 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
3) ஆஃப் ஸ்பின்னர் சுனில் நரைன் 52 சர்வதேச டி20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20யில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது மேற்கிந்தியத் தீவுகள் பௌலர் என்ற பெருமையை டுயன் பிராவோ-வுடன் பகிர்ந்து கொண்டார். 54 சர்வதேச டி20 விக்கெட்டுகளுடன் சாம்யுல் பத்ரி இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.