முதல் ஒருநாள் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்திய அணிகள் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்கின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் என்ற ஓரளவிற்கு சிறப்பான ரன்களை இந்தியா குவித்தது. இந்திய அணி சார்பில் விராட் கோலி சதம் விளாசினார். ஸ்ரேயஸ் ஐயர் 71 ரன்களை குவித்தார்.
மேற்கிந்திய தீவுகளில் எவின் லிவிஸ் 80 பந்துகளில் 65 ரன்களை ஒரு நல்ல தொடக்கத்தை அளித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் அருமையான தொடக்கத்தை அளித்தாலும் அதனை சரியாக பயன்படுத்தி பெரிய ரன்களை குவிக்கத் தவறினர். இதனால் மண்ணின் மைந்தர்கள் 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இன்னும் ஒரு போட்டியே உள்ள நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் மீண்டெழுந்து மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சி செய்யும். மேற்கிந்திய தீவுகள் அணியின் மிகப்பெரிய கவலை என்னவெனில், பேட்டிங்கில் சிறப்பான தொடக்கத்தை அளித்தும் அதனை பெரிய ரன்களாக மாற்றத் தவறுகின்றனர். அத்துடன் அந்த அணியின் பௌலர்களும் ஒரே சீரான ஆட்டத்திறனுடன் பந்துவீச்சை மேற்கொள்ள தவறுகின்றனர்.
மறுமுனையில் இந்திய அணி முழு நம்பிக்கையுடன் 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும். தங்களது முழு ஆட்டத்திறனை மீண்டுமொருமுறை வெளிகொணர்ந்து தொடரை தங்கள் வசம் மாற்றியமைக்க இந்திய அணி போராடும் என்பதில் சந்தேகமில்லை.
ஆட்டத்தின் தகவல்கள்
நாள்: ஆகஸ்ட் 14, 2019 (புதன்)
நேரம்: இந்திய நேரப்படி இரவு 7 மணி
இடம்: குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட்
காலநிலை
போட்டி நாளன்று போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இடியுடன் கூடிய மழை இருக்க 40 சதவீத வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆட்டமானது அந்நாளின் காலையிலேயே தொடங்கவிருப்பதால் மழையினால் போட்டி பாதிப்படைய வாய்ப்புகள் குறைவு.
ஆடுகள நிலை
குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் வீசப்படும் பந்து பேட்டை சிறப்பாக நெருங்குவதால் அதிக ரன்கள் குவிக்கப்படக்கூடிய மைதானமாகும். போட்டி நாளன்று மேகமூட்டத்துடன் காணப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதால் 270+ என்ற ரன்களே இந்த மைதானத்திற்கு கடின இலக்காக இருக்கும். ஏனெனில் இரண்டாவது இன்னிங்ஸில் பௌலிங்கிற்கு சாதகமாக இம்மைதானம் மாறக்கூடும்.
நேருக்கு நேர் புள்ளிவிவரங்கள்
இரு அணிகளும் விளையாடிய மொத்த போட்டிகள்: 129
மேற்கிந்திய தீவுகள்: 62
இந்தியா: 61
சமநிலை: 2
போட்டி முடிவில்லை: 4
இரு அணிகளின் உத்தேச ஆடும் XI
இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணி வேகப்பந்து வீச்சாளர் ஓஸானே தமாஸிற்கு பதிலாக மிதவேகப்பந்துவீச்சாளர் கீமோ பால்-ஐ களமிற்கும் என நம்பப்படுகிறது.
இந்தியா
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷீகார் தவான், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஸ்ரேயஸ் ஐயர், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது.
மேற்கிந்திய தீவுகள்
ஜேஸன் ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ் கெய்ல், எவின் லிவிஸ், ஷை ஹோப் (விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரான், ஷீம்ரன் ஹேட்மயர், ரோஸ்டன் ஜேஸ், கீமோ பால், கரோலஸ் பிராத்வெய்ட், கேமார் ரோஜ், ஷேல்டன் காட்ரேல்.
நேரலை விவரங்கள்
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியை நேரலையாக சோனி நெட்வொர்க் சோனி டென் 1, சோனி டென் 1 HD, சோனி டென் 3, சோனி டென் 3 HD ஆகிய சேனல்கள் வழியாக ஒளிபரப்பப்புகிறது.
மேலும் இப்போட்டியை கைப்பேசியில் காண சோனி லைவ் என்ற செயலியை தரவிறக்கம் செய்யவும்.