இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய 3வது டி20யில் நிகழ்த்தப்பட்ட சாதனைப் புள்ளிவிவரங்கள்

India won the T20I series 3-0 Against Windies. Courtesy: BCCI/Twitter
India won the T20I series 3-0 Against Windies. Courtesy: BCCI/Twitter

ஆகஸ்ட் 6 அன்று மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்திய அணிகள் மோதிய 3வது டி20 போட்டியில் இந்திய அணி வென்றது. இதன்மூலம் 3-0 என தொடரை வென்று அசத்தியுள்ளது.

இந்ததொடரின் கடைசிப் போட்டியான இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. சுற்றுப்பயணம் வந்துள்ள இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளை 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களில் சுருட்டியது. இந்திய அணி இந்த இலக்கை 3 விக்கெட்டுகளை இழந்தே 19.1 ஓவர்களில் சேஸ் செய்தது. இந்திய அணி 5 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முழு ரன் விவரம்:

மேற்கிந்திய தீவுகள் - 146/6 (20 ஓவர்கள்), கீரன் பொல்லார்ட்- 58, ரோவ்மன் பவ்ல்- 32*; தீபக் சகார்- 3/4)

இந்தியா - 150/3 (19.1 ஓவர்கள்), ரிஷப் பண்ட் - 65*, விராட் கோலி - 58; ஒஸானே தாமஸ் - 2/29.

ஆட்ட முடிவு: இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

அணிகளின் புள்ளி விவரங்கள்

மேற்கு இந்திய தீவுகள்:

1) இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை விளாசியது. இதுஅவே இந்தியாவிற்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகளின் சொந்த மண்ணில் இரண்டாவது மிகக்குறைந்த ரன்களாகும். 2011ல் ஜீன் 4 அன்று போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த நடந்த போட்டி ஒன்றில் மேற்கிந்தியத் தீவுகளால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளதே மேற்கிந்தியத் தீவுகள் தனது சொந்த மண்ணில் இந்தியாவிற்கு எதிராக குவித்த மிகக்குறைந்த ரன்களாக உள்ளது.

2) இந்த டி20 போட்டியின் இழப்பினால் மேற்கிந்தியத் தீவுகள் மொத்தமாக 57 சர்வதேச டி20 போட்டிகளை இழந்துள்ளது. இதுவே ஒரு அணியின் அதிகபட்ச சர்வதேச டி20 தோல்விகளாகும்.

இந்தியா

1) இந்தப் போட்டியில் இந்தியா வென்றதன் மூலம் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்திய அணி தொடர்ந்து 6 போட்டிகளில் வென்றுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தொடர்ந்து 6 போட்டிகளில் வென்ற முதல் அணி இந்தியா. இதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் 5 தொடர் வெற்றிகளை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பெற்றுள்ளது.

2) இந்திய அணி 3-0 என இந்த இரு தரப்பு தொடரை வைட் வாஷ் செய்துள்ளது. 3 சர்வதேச டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா செய்த 4வது வைட் வாஷ் இதுவாகும். இதில் இரு வைட் வாஷ் தொடர்கள் அந்நிய மண்ணில் வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 2016ல் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 3-0 என ஆஸ்திரேலியாவை வைட் வாஷ் செய்துள்ளது.

வீரர்களின் புள்ளிவிவரங்கள்

இந்தியா

Deepak chahar
Deepak chahar

1) ராகுல் சகார் தனது 20 வயது 2 நாளில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். இதன்மூலம் இளம் வயதில் டி20யில் அறிமுகமான 4வது வீரர் என்ற பெருமையை பெற்றார். முதல் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் (18 ஆண்டுகள் 80 நாட்கள்), ரிஷப் பண்ட் (19 ஆண்டுகள் 120 நாட்கள்) இரண்டாவது இடத்திலும், இஷாந்த் சர்மா (19 ஆண்டுகள் 152 நாட்கள்) மூன்றாவது இடத்திலும் உள்ளார்.

2) வலதுகை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சகார் இப்போட்டியில் 3 ஓவர்களை வீசி 4 ரன்களை மட்டுமே அளித்து 1 மெய்டனுடன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருடைய எகானமி ரேட் 1.33 ஆகும். இதற் மூலம் சர்வதேச டி20யில் மிகக்குறைந்த ஒரு போட்டியில் மிகக்குறைந்த எகானமி ரேட் கொண்டு பந்துவீசிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். 2014ல் மார்ச் 23 அன்று தாக்காவில் நடந்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக புவனேஸ்வர் குமார் 3 ஓவர்களில் 3 ரன்களை மட்டுமே அளித்து 1.00 எகானமி ரேட்டுடன் சாதனை படைத்துள்ளார். மேலும் டி20 வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சிறந்த பௌலிங் செய்துள்ள இந்திய பௌலர் தீபக் சகார். இதற்கு முன் குல்தீப் யாதவ் கடந்த வருடத்தில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் 4 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டுமே அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

3) விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 3வது டி20யில் 65 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுவே சர்வதேச டி20யில் இந்திய விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன் இங்கிலாந்திற்கு எதிராக மகேந்திர சிங் தோனி 56 ரன்கள் விளாசியதே டி20யில் இந்திய விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ரன்களாக இருந்தது. மேலும் சர்வதேச அளவில் 50+ ரன்களை குவித்த 4வது இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.

3) விராட் கோலி இப்போட்டியில் 59 ரன்களை குவித்தார். இதன்மூலம் தனது சர்வதேச டி20யில் தனது 21வது 50+ ரன்களை கடந்தார். சர்வதேச டி20யில் அதிக 50+ ரன்களை விளாசிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோலி இனைந்தார். இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவும் 21 முறை 50+ ரன்களை விளாசியுள்ளார்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now