வீரர்களின் புள்ளிவிவரங்கள்
இந்தியா
1) ராகுல் சகார் தனது 20 வயது 2 நாளில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். இதன்மூலம் இளம் வயதில் டி20யில் அறிமுகமான 4வது வீரர் என்ற பெருமையை பெற்றார். முதல் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் (18 ஆண்டுகள் 80 நாட்கள்), ரிஷப் பண்ட் (19 ஆண்டுகள் 120 நாட்கள்) இரண்டாவது இடத்திலும், இஷாந்த் சர்மா (19 ஆண்டுகள் 152 நாட்கள்) மூன்றாவது இடத்திலும் உள்ளார்.
2) வலதுகை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சகார் இப்போட்டியில் 3 ஓவர்களை வீசி 4 ரன்களை மட்டுமே அளித்து 1 மெய்டனுடன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருடைய எகானமி ரேட் 1.33 ஆகும். இதற் மூலம் சர்வதேச டி20யில் மிகக்குறைந்த ஒரு போட்டியில் மிகக்குறைந்த எகானமி ரேட் கொண்டு பந்துவீசிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். 2014ல் மார்ச் 23 அன்று தாக்காவில் நடந்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக புவனேஸ்வர் குமார் 3 ஓவர்களில் 3 ரன்களை மட்டுமே அளித்து 1.00 எகானமி ரேட்டுடன் சாதனை படைத்துள்ளார். மேலும் டி20 வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சிறந்த பௌலிங் செய்துள்ள இந்திய பௌலர் தீபக் சகார். இதற்கு முன் குல்தீப் யாதவ் கடந்த வருடத்தில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் 4 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டுமே அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
3) விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 3வது டி20யில் 65 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுவே சர்வதேச டி20யில் இந்திய விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன் இங்கிலாந்திற்கு எதிராக மகேந்திர சிங் தோனி 56 ரன்கள் விளாசியதே டி20யில் இந்திய விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ரன்களாக இருந்தது. மேலும் சர்வதேச அளவில் 50+ ரன்களை குவித்த 4வது இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.
3) விராட் கோலி இப்போட்டியில் 59 ரன்களை குவித்தார். இதன்மூலம் தனது சர்வதேச டி20யில் தனது 21வது 50+ ரன்களை கடந்தார். சர்வதேச டி20யில் அதிக 50+ ரன்களை விளாசிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோலி இனைந்தார். இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவும் 21 முறை 50+ ரன்களை விளாசியுள்ளார்.