மேற்கிந்திய தீவுகள் மண்ணில் நடந்த ஒருநாள் தொடர்களில் அதிக ரன்களை குவித்துள்ள 3 இந்திய பேட்ஸ்மேன்கள்

Yuvraj Singh and Dhoni
Yuvraj Singh and Dhoni

இந்திய கிரிக்கெட் அணியில் எப்பொழுதுமே பல சிறந்த பேட்ஸ்மேன்கள் இருப்பர். மறுமுனையில் மேற்கிந்தியத் தீவுகளில் எப்பொழுதுமே சிறந்த பௌலர்களை கொண்டு இருப்பர். எனவே இந்த இரு அணிகள் மோதினால் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டு பெரும் ஆரவாரத்துடன் காணப்படும்.

மேற்கிந்திய தீவுகள் மண்ணில் போட்டிகள் நடந்தால் மேன்மேலும் ஆரவாரத்துடன் இருக்கும். இதற்கு காரணம் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொந்த மண்ணில் அந்த அணியின் பௌலிங்கிற்கு பெரும் சாதகமாக இருக்கும். கரேபியன் மண்ணில் ஒரு வெளிநாட்டு பேட்ஸ்மேன் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தினால் ரசிகர்களின் மத்தியில் அதிகம் புகழப்படுவார்கள். இந்திய பேட்ஸ்மேன்களுள் சிலர் மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது பெயரை பதிந்துள்ளனர்.

சிறந்த பௌலிங்கிற்கு எதிராக அதிரடி பேட்டிங்கை வெளிபடுத்துவது சாதாரண விஷயமல்ல. இருப்பினும் சில நட்சத்திர இந்திய பேட்ஸ்மென்கள் கரேபியன் மண்ணில் அதிக ரன்களை குவித்துள்ளனர். நாம் இந்த கட்டூரையில் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த ஒருநாள் தொடரில் அதிக ரன்களை குவித்துள்ள டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்களைப் பற்றி காண்போம்.

#3 மகேந்திர சிங் தோனி - 532 ரன்கள்

MS Dhoni
MS Dhoni

குறிப்பிட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் வகைகளில் சிறந்த ஃபினிஷராக மகேந்திர சிங் தோனி உள்ளார். இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான இவர் கரேபியன் மண்ணில் சில சாதனைகளைப் படைத்துள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி மேற்கிந்தியத் தீவுகளில் 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 48ற்கும் மேலான சராசரியுடன் 532 ரன்களை விளாசியுள்ளார்.

வலதுகை பேட்ஸ்மேனான இவர் விளையாடிய முதல் 17 ஓடிஐ இன்னிங்ஸிலேயே 3 அரைசதங்களை விளாசியுள்ளார். ஆனால் சதம் விளாச தவறிவிட்டார். கரேபியன் மண்ணில் ஒரு போட்டியில் இவரது அதிகபட்ச ரன்கள் 95 ஆகும். மேற்கிந்திய தீவுகள் மண்ணில் தோனியின் முக்கியமான இன்னிங்ஸ் என்றால், 2013ல் நடந்த இலங்கைக்கு எதிரான முத்தரப்பு தொடர்தான்.

கரேபியன் மண்ணில் மகேந்திர சிங் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 80ற்கு அதிகம் ஆகும். கடைநிலையில் ஒரு பேட்ஸ்மேனின் சிறப்பான சராசரி இதுவாகும். அதிகப்படியான இடங்களில் தோனி தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளார்.

#2 யுவராஜ் சிங் - 555 ரன்கள்

Yuvraj Singh
Yuvraj Singh

ஓடிஐ/டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். சமீபத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் மிடில் ஓவரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியிடமிருந்து வெற்றி வாய்ப்பை பறிக்கும் திறன் கொண்டவர். மிகவும் அதிரடி ஆட்டக்கார ஆல்-ரவுண்டரான இவர் கிரிக்கெட் விளையாடும் பெரும்பாலான நாடுகளுக்கு எதிராக மிகச்சிறந்த சாதனைகளைப் படைத்துள்ளார். யுவராஜ் சிங் கரேபியன் மண்ணிலும் பல சாதனைகளை புரிந்துள்ளார்.

கரேபியன் மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரர் யுவராஜ் சிங். பஞ்சாப் சூப்பர் ஸ்டார் யுவராஜ் சிங் 17 போட்டிகளில் பங்கேற்று 37 சராசரியுடன் 555 ரன்களை குவித்துள்ளார். இடதுகை பேட்ஸ்மேனான இவர் கரேபியன் மண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில் 3 அரைசதங்கள் மற்றும் 1 சதங்களை விளாசியுள்ளார்.

சாதனைகள் மற்றும் ரன்களுக்காக யுவராஜ் சிங் எப்போழுதுமே விளையாடியது கிடையாது. தனி ஒருவராக ஆட்டத்தின் போக்கை மாற்றி இந்திய அணியை எவ்வாறு வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வது என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு விளையாடுவார் யுவராஜ் சிங். மேற்கிந்திய தீவுகளில் இவரது சராசரி 90க்கும் மேலாக உள்ளது. ஆட்டத்தினை எந்த நேரத்திலும் மாற்றும் திறனை யுவராஜ் சிங் தன்னிடத்தில் இயல்பாகவே கொண்டிருப்பவர்.

#1 விராட் கோலி - 591 ரன்கள்

Virat kholi
Virat kholi

கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி பல ரசிகர்களாலும், கிரிக்கெட் வள்ளுநர்களாளும் போற்றப்படுகிறார். ரசிகர்களின் போற்றுதல் படியே விராட் கோலியும் அனைத்து வகையான கிரிக்கேட்டிலும் சிறந்து விளங்குகிறார். மேற்கிந்திய தீவுகளில் அதிக ஓடிஐ ரன்களை குவித்த இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையில் விராட் கோலி-யை காண்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் பெரும்பாலானோருக்கு இருக்காது. பொதுவாக மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள ஆடுகளங்கள் மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அத்துடன் சிறப்பாக ஸ்விங் ஆகும். இந்த பந்துவீச்சில் விராட் கோலி சிறப்பாக விளையாடக் கூடயவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

கரேபியன் மண்ணில் நடந்த 15 போட்டிகளில் 591 ரன்களை குவித்து அதிக ரன்களை குவித்த இந்திய பேட்ஸ்மேனாக விராட் கோலி வலம் வருகிறார். வலதுகை பேட்ஸ்மேனான இவர் 45.46 சராசரியையும், 87.29;ஸ்ட்ரைக் ரேட்டையும் மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் ஒருநாள் போட்டிகளில் வைத்துள்ளார். கரேபியன் மண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில் ஒரு சதங்களுக்கும் மேலாக விளாசியுள்ள ஒரே பேட்ஸ்மேன் விராட் கோலி ஆவார்.

மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த டாப் 3 பேட்ஸ்மேன்களுள் விராட் கோலி மட்டுமே தற்போது தற்போது நடைபெற்று வரும் தொடரில் இடம்பெற்றுள்ளார். இதன்மூலம் இந்திய கேப்டன் விராட் கோலி கரேபியன் மண்ணில் தனது ரன்களை மேன்மேலும் அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

Quick Links

App download animated image Get the free App now