#2.தொடக்க ஆட்டக்காரராக 300 சிக்சர்களை அடித்த முதலாவது இந்தியர்:
கடந்த பத்தாண்டுகளில் டி20 தொடர்கள் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது, தட்டையான ஆடுகளங்களின் உதவியுடன் எதிர்பார்க்கப்படாத பல ஷாட்களை பல்வேறு பேட்ஸ்மேன்களும் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர். உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளரின் ஓவரிலும் கூட அதிகப்படியான ரன்கள் இக்காலத்தில் குவிக்கப்படுகின்றன. ஓவருக்கு தலா 3 பவுண்டரிகள் குவிப்பது இக்காலத்தில் சாத்தியமாகியுள்ளன. 2000களின் தொடக்கத்தில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே பந்துவீச்சாளர்களை வறுத்தி எடுக்கும் பேட்ஸ்மேன்களான சனத் ஜெயசூர்யா, விரேந்திர சேவாக், ஆடம் கில்கிறிஸ்ட் உள்ளிட்ட வீரர்களைப் போல பல பேட்ஸ்மேன்கள் தற்போது கிரிக்கெட் உலகிற்கு அறிமுகம் ஆகி உள்ளனர். அவற்றில் குறிப்பிடத்தக்க பேட்ஸ்மேனான கிறிஸ் கெயில், அனைத்து தரப்பு போட்டிகளிலும் இதுவரை 522 சிக்சர்களை அடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இலங்கையின் ஜெயசூர்யா 335 சிக்சர்களை அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். எப்போதும் பார்மின் உச்சகட்டத்தில் திகழும் இந்தியாவின் ரோகித் சர்மா மூன்றாம் இடத்தில் உள்ளார். இதுவரை 192 ஆட்ட்த்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 294 சிக்சர்களை குவித்துள்ளார். 300 சிக்ஸர்கள் வெளுக்க இன்னும் ஆறு மிகப் பெரிய ஷாட்கள் இவருக்கு தேவைப்படுகிறது. இந்த தொடரிலேயே இத்தகைய மைல்கல்லை எட்டி 300 சிக்ஸர்களை விளாசி முதலாவது இந்திய தொடக்க பேட்ஸ்மேன் என்னும் பெருமையை பெறுவார், ரோஹித் சர்மா.