ரிஷப் பண்ட்: விக்கெட் கீப்பங் திறன்
ரிஷப் பண்ட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. இவரிடம் உள்ள சில திறன்கள் இவரை சிறந்த விக்கெட் கீப்பராக டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரதிபலித்தது. டெல்லியைச் சேர்ந்த இவர் இரு வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் இதுவரை விளையாடியுள்ளார். அதில் சிறந்த விக்கெட் கீப்பங்கை வெளிபடுத்த தவறிவிட்டார்.
அனைத்து விக்கெட் கீப்பர்களுக்கும் ஆரம்பத்தில் இருக்கும் அதே தடுமாற்றம் ரிஷப் பண்ட்-ற்கு இருந்து வந்தது. இவர் விக்கெட் கீப்பிங்கில் செய்யும் தவறை கிரிக்கெட் வள்ளுநர்கள் குறிப்பிட்டு எடுத்துரைத்தனர்.
இருப்பினும் இவர் 9 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள காரணத்தால் ஆரம்பத்திலேயே ரிஷப் பண்ட்-டின் விக்கெட் கீப்பங் திறனை மதிப்பிடுவது தவறு. முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் ஃபெரோக் இன்ஜினியர் ரிஷப் பண்ட் பற்றி கூறியதாவது: "ரிஷப் பண்ட் தனது முழு பங்களிப்பையும் இந்திய அணிக்காக அளித்து வருகிறார். தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்கிறார். மேலும் ரிஷப் பண்ட் என்னுடைய இளமை காலத்தை நினைவு படுத்துகிறார். இவருக்கு சிறந்த எதிர்காலம் உண்டு".
விருத்திமான் சாஹா மீண்டும் டெஸ்ட் அணியில் : யாருக்கு முன்னுரிமை
விருத்திமான் சாஹா நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது முதல் உடல்தகுதியை நிரபித்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார். 34 வயதான பெங்கால் விக்கெட் கீப்பரான இவர் இந்திய-ஏ அணியில் இடம்பிடித்து மேற்கிந்தியத் தீவுகள்-ஏ அணிக்கு எதிரான 4 நாள் டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசினார்.
இப்போட்டியில் சாஹா விளாசிய 62 மூலம், இவர் தற்போது வரை சிறந்த பேட்டிங் திறனுடன் உள்ளார் என நமக்கு தெரிகிறது. இதனால் தற்போது இந்திய டெஸ்ட் அணியின் ஆடும் XI-ஐ தேர்வு செய்வதில் இந்திய நிர்வாகத்திற்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு கடினமான முடிவை எடுத்தாக வேண்டும்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு, விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ரிஷப் பண்ட்-ஐ இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.