ஒவ்வொரு விளையாட்டும் தொடங்கிய காலம் முதலே அதன் தொடர்பான பல்வேறு பரிணாமங்களை எட்டி வருகிறது.கிரிக்கெட் போட்டிகளும் அவ்வாறே பற்பல மாற்றங்களைக் கொண்டு வந்து ரசிகர்களைச் சந்தோஷப்படுத்துகின்றது.காலவரம்பற்ற டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்கள் கொண்டதாகச் சுருக்கப்பட்டதும் எல்லைகளே இல்லாத கிரிக்கெட் பிட்சுகளும் தற்போது 22 யார்டு பரப்பின் இடையே ஸ்டிரிப்பை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்தப் புதுவகையான மாற்றங்களால், பல்வேறு புதிய கிரிக்கெட் ஷாட்களும் அகன்ற விதத்தில் பந்துவீச்சாளர்களும் தங்கள் திறனை மேலும் வளர்த்துள்ளனர்.இதற்கிடையில், விக்கெட் கீப்பங்கும் பெரும் அளவில் மாற்றம் செய்யப்படாத ஒன்றாகும்.1990 காலகட்டத்தில் விக்கெட் கீப்பிங் என்பது ஒரு பணியாக மட்டுமே கிரிக்கெட்டில் கருதப்பட்டது.1990 -களின் இறுதியிலும் 2000 - களின் தொடக்கத்திலும் அது தனது போக்கை மாற்றித் தனது பொன்னான பணியைத் தொடங்க அமைத்தது.டி20 போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் ஒரு விக்கெட் கீப்பராக மட்டுமே இருக்காமல் அணியின் பேட்டிங் பலத்தை கூட்டும் வகையில் ஒரு அபாயகரமான பேட்ஸ்மேனாக உருவெடுக்கத் தொடங்கினர்.
கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிட்ட வீரர்கள் ஒரு விக்கெட் கீப்பராகவும் அதேசமயம் ஒரு நல்ல பேட்ஸ்மேனாகவும் தங்களது திறனை வெளிப்படுத்தினர்.அவ்வாறு தங்களது திறனைக் கச்சிதமாய் வெளிபடுத்திய அனைத்து கால சிறந்த ஐந்து விக்கெட் கீப்பர்கள இனி காண்போம்.
5.பிரண்டன் மெக்கல்லம் :
பிரண்டன் மெக்கல்லம் என்றவுடனே பல கிரிக்கெட் ரசிகர்களின் நினைவுக்கு வருவது, பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அசுர வேகத்தில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட பேட்ஸ்மேன் என்பதேயாகும்.கம்பீரம், வேகம் மற்றும் அச்சமின்றி பந்தை எதிர்கொள்ளும் திறன் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இறுதிவரை காணப்பட்டது.
21 -ஆம் நூற்றாண்டின் கிரிக்கெட் உலகின் ரசிகர் கூட்டத்தைக் கவரக்கூடிய வீரர்களில் இவரும் ஒருவர்.இவர் சற்று உயரம் குறைவாய் இருந்தாலும், தனது விக்கெட் கீப்பிங் பணியை அதற்கேற்ப கச்சிதமாய் செய்தார்.
பின்னர் இவர் ஒரு நல்ல பீல்டராகவும் செயல்பட்டார்.36 வயதில் வெகுசிலரால் மட்டுமே பந்தைத் துரத்திப்பிடிக்கும் திறன் வெளிபடும், அவர்களில் இவரும் ஒருவர்.
இவரத அச்சமில்லாத மற்ற அணியினருக்கு எதிரான கேப்டன்ஷிப் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.ஒரு பேட்ஸ்மேனாகப் பல போட்டிகளில் நினைவுக்கூரக்கூடிய வகையில் ஆடியுள்ளார்.முச்சதத்தை அடித்து இந்தியாவிற்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியை வென்றது, ஐபிஎல் - இல் 158 ரன்களை அடித்தது, இந்திய ரசிகர்கள் எப்போதும் மறக்கமுடியாத ஆட்டங்களாகும்.
அந்த ஐபிஎல் சதம் அடித்து எட்டு ஆண்டுகள் கழித்து டெஸ்ட போட்டிகளில் அதிவேக சதத்தை எட்டிய வீரர் என்ற பெருமையைத் தனதாக்கினார்.2015 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேற அரும்பாடுபட்டார்.ஒரு கேப்டனாகவும் ஒரு தொடக்க ஆட்டக்காரராகவும் ஒரு நல்ல பீல்டராகவும் பிற்காலத்தில் தன் அணிக்காக அரும்பணியாற்றினார். வெறும் ஒரு கோடி மக்கள் தொகை கூட இல்லாத ஒரு நாட்டு கிரிக்கெட் அணியை உலகறியச்செய்தார்.இவரது தொடக்க ஆட்டத்திறனை 2015 - இன் உலகக்கோப்பையில் எவராலும் தடுக்கமுடியவில்லை.