இரண்டு ஸ்பின்னர்கள், இரண்டு ஆல்-ரவுண்டர்கள் உலகக்கோப்பை தொடருக்கு கேப்டன் கோலியின் வியூகம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி

நியூசிலாந்திற்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்து பேட்ஸ்மேன்களையும், ஆல்-ரவுண்டர்களையும், ஸ்பின்னர்களையும் அணியில் இடம்பெற வைத்து அவர்களை உலகக்கோப்பைதொடருக்குத் தயார்படுத்தத இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முடிவு செய்துள்ளார். இது ஒரு சிறந்த முடிவாகும். இது அணிக்கு பந்துவீச்சு மற்றும் பேட்ஸ்மேன்கள் காம்பிநேசன் சரியாக அமைவதற்கு உதவும். இது வரவிருக்கும் உலக கோப்பை தொடருக்கு ஒரு சீரான அணியை உருவாக்க உதவுகிறது. ஜடேஜா மற்றும் சாஹேல் ஆகியோரில் யாரை அணியில் இடம் பெற வைப்பது என்ற கேள்வி பெரும் குழப்பத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. ஜடேஜா சிறந்த ஃபீல்டர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன். சாஹேல் சிறந்த பவுலராக 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து வருகிறார்.

அணியில் இரண்டு சுழற்ப்பந்து வீச்சாளர்கள் வைத்து விளையாடுது என்ற முடிவில் உள்ளனர் இந்திய அணி. ஜடேஜா, சாஹேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரில் இருவர் அணியில் இடம்பெறுவார்கள். எந்த இருவர் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆடுகளத்திற்கு ஏற்ப ஒவ்வொரு போட்டியிலும் மாற்றி மாற்றி களமிறங்க வாய்ப்புகள் அதிகம். சாஹேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக இருந்தாலும் பேட்டிங் இல்லாமல் ஒரு பந்துவீச்சாளர் கணக்கில் அணியில் இடம்பெறுவர். ஆனால் ஜடேஜா ஆல்-ரவுண்டராக பேட்டிங் மற்றும் பந்து வீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இந்தியா போன்ற ஒரு வலுவான பேட்டிங் பிரிவை கொண்ட அணிக்கு பந்துவீச்சின் தரத்தை மேம்படுத்துவதற்கு அதிக பந்து வீச்சாளர்களை கொண்ட அணியை தேர்வு செய்ய வேண்டும். குல்தீப் யாதவுடன் சேர்ந்து சாஹேலையும் தேர்வு செய்வது சிறந்தது. அவர்கள் தற்போது உலக தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள ஸ்பின்னர்களாக உள்ளனர். இதேபோல், கேதர் ஜாதவ் மற்றும் விஜய் ஷங்கர் ஆகியோரை தேர்வு செய்வது, மேலும் அணியை சமநிலை படுத்த உதவுகிறது. ஜாதவ் தனது பேட்டிங் நுட்பத்தில் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தனது பேட்டிங் திறமையை பந்து வீச்சிற்கு எதிராக சிறப்பாக மேம்படுத்தியிருக்கிறார் என்பதைக் காட்டினார்.

மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வது அணிக்கு முக்கியமான ஒன்று. ஆறாவது பந்து வீச்சாளராக அணியில் ஆல்-ரவுண்டர் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். அதேபோல் ஹார்டிக் பாண்டியா இல்லாத நிலையில் அணியில் விஜய் ஷங்கரை தேர்வு செய்து நியூசிலாந்து தொடரில் அவரை பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது மீண்டும் பாண்டியா அணியில் இடம் பெற்றதன் மூலம் விஜய் ஷங்கர் இன்னும் ஒரு ஆல்- ரவுண்டர் விருப்பமாக அணிக்கு இருப்பார். இங்கிலாந்தில் உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதால் வேகப்பந்து பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் இருப்பது அணிக்கு முக்கியமான ஒன்று.

சஹால்- நியூசீலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி
சஹால்- நியூசீலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி

நியூசிலாந்து தொடரில் முதல் போட்டியில் ஆல்-ரவுண்டர்களையும் சுழற்பந்துவீச்சாளர்களையும் சேர்த்து அணியை பலப்படுத்தி வெற்றியை கண்டது இந்திய அணி. இந்த தொடரில் மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் மற்ற வீரர்களையும் அணியில் இடம்பெற வைத்து அவர்கள் திறமையையும் சோதனை செய்வது உலகக்கோப்பை தொடருக்கு சிறப்பாக இருக்கும்.

எழுத்து-அமீர்ஜீத் நாயக்

மொழிபெயர்ப்பு-சுதாகரன் ஈஸ்வரன்

Quick Links

App download animated image Get the free App now