பாண்டியாவின் இழப்பு இந்திய அணியை பாதிக்கும் - மைக்கேல் ஹசி

Hardik  pandya
Hardik pandya

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட போகும் இந்திய அணிக்கு பாண்டியாவின் இழப்பானது ஒரு ஒரு கவலை அளிக்கும் விஷயம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி கூறியுள்ளார். இந்த தொடர் அடுத்த மாதம் ஆறாம் தேதி தொடங்க உள்ளது.

தற்போதைய இந்திய அணியில், மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக கருதப்படும் ஹர்திக் பாண்டியா துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாடும் போது காயமடைந்தார். தற்போது அவர் நீண்ட ஓய்வில் உள்ளார்.” ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் விளையாட தகுதியான ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. ஆகையால் இவரின் இழப்பு இந்தியணிக்கு ஒரு பேரிழப்பாக அமையும் என்பது மறுக்கப்படாத உண்மையாகும்.

தற்போது பலவீனமாக உள்ள ஆஸ்திரேலிய அணியை வெல்ல இந்திய அணிக்கு இது ஒரு வாய்ப்பாகும் ஆனால் தாய் மண்ணில் அந்த அணியின் பந்துவீச்சு பலம் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக அமையும்.ஆஸ்திரேலியா அணி ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தவித்துக்கொண்டு இருக்கும் நிலையில், இது இந்திய அணி இத்தொடரை வெல்ல சாதகமானதாக உள்ளது.

இதனால் இந்திய அணி பிரித்வி ஷா, ரிஷப் பான்ட், ஹனுமன் விஹாரி போன்ற இளம் வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க், ஹேசல்வுட் , லயன் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆடும் இந்த தொடர் ஆர்வமூட்டும் வகையில் அமையும்.இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு நன்றாகவே உள்ளது. இருப்பினும்,உலகத்தரமான ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு பலம்,இந்திய அணிக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் உள்ளது.

கடந்த 2014-2015 டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்திய கேப்டன் விராத் கோலியை சீண்டியதால் அவர் வாயாலும் பேட்டாலும் தக்க பதிலடி கொடுத்தார். தற்போது கோஹ்லி ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தும் வகையில் உள்ளார். எனவே,ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கோஹ்லியை சீண்டாமல் அமைதி காக்குமாறு கிளென் மெக்ராத் கூறியுள்ளார்.

வரப்போகும் தொடரை பற்றி மைக் ஹசி கூறியதாவது :- "இங்கிலாந்து டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இந்திய அணி தோற்றபோதிலும் இந்திய அணியே சிறந்தது என கருதுகிறேன். பந்தை சேதப்படுத்திய விவகாரம் முடிந்த ஒன்றாகவே கருதுகிறேன். இது போன்ற ஒழுங்கீன செயல்களால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மீது விமர்சனம் இருந்தாலும் ரசிகர்களுக்கு கிரிக்கெட்டின் மீதான நம்பிக்கை குறையாது.. டிம் பெய்ன் தலைமையை ஏற்றுள்ள ஆஸ்திரேலிய அணியை பல விமர்சகர்கள் ஏற்காதபோதிலும் எனது ஆதரவு பெய்ன்க்கு உள்ளது அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம் அவர் ஒரு நல்ல போட்டியாளர், அது இந்திய அணிக்கு எதிராக போராட உதவும்.

மேலும்,ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்கள் பேட்டிங் திறனை இந்த தொடரில் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்திய அணியின் பந்துவீச்சால் அவர்களது பேட்டிங் சோதிக்கப்படும்.இதுபோன்ற பெரிய வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு அவர்கள் அதிக ரன்களை குவிக்க வேண்டும் .இதனால் அவர்களது பேட்டிங் திறன் மேம்படும்"-இவ்வாறு மைக்கேல் ஹசி கூறினார்