ஆஸிக்கு எதிரான டெஸ்டில் ஜொலிப்பாரா ரோஹித் ஷர்மா?

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி வரும் டிசம்பர் மாதம் முதல் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனேவே இந்தியாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மா சேர்க்கப்படவில்லை. இதனால் இந்திய தேர்வுக்குழுவின் மீது பல்வேறு வைகையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் டெஸ்ட் அணியில் ரோஹித் ஷர்மாவை சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கங்குலி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில்

ஆசிய கோப்பையை ரோஹித் ஷர்மாவும், அவரது அணி வீரர்களும் பெற்றது சிறந்ததாகும். ஒவ்வொரு முறையும் டெஸ்ட் அணி அறிவிக்கப்படும்போது ரோஹித் ஷர்மா பெயர் இடம் பெறாமல் போகும். இது எனக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது.டெஸ்ட் அணியில் ரோஹித் ஷர்மா மீண்டும் இடம் பெறுவது வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு கங்குலி பதிவிட்டிருந்தார்.

ரோஹித் ஷர்மா கடைசியாக தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி மாதம் நடந்த டெஸ்டில் விளையாடினார். முதல் 2 டெஸ்டில் அவர் 10, 11, 10 மற்றும் 47 ரன்களை எடுத்தார். இதனால் 3-வது டெஸ்டில் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் இடம் பெறவில்லை. தற்போது இந்தியா கடைசியாக பங்கேற்ற வெஸ்ட்இண்டீஸ் தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் தான் ரோஹித் ஷர்மா ஆஸி.தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். பொதுவாக ரோஹித் ஷர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகச்சிறந்த வீரர் அதில் மாற்றுக்கருத்தே இல்லை. அதை கடந்த வாரம் மேக்ஸ்வெல் கூட ஒப்புக்கொண்டுருக்கிறார்.

ஆனால் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரையில் ரோஹித் ஷர்மா இன்னும் தன் இடத்தை நிலைநிறுத்திக்கொள்ளவில்லை. இதுவரையில் 25போட்டிகளில் விளையாடி 1479 ரன்கள் குவித்துள்ளார். இதில் 9 அரைசதங்களும் 3சதங்களும் அடங்கும். ரோஹித் பொதுவாக பேட்டிங்கில் செட்டில் ஆக நிறைய பந்துகளை எடுத்துக்கொள்வார். ஆனால் செட்டில் ஆன பின்பு இவரின் விக்கெட்டை வீழ்த்துவது மிக கடினமே. ஒருநாள் போட்டியில் யாருமே நிகழ்த்திறாத அரியவகை சாதனையான மூன்று முறை இரட்டைசதம் அடித்தது அனைவரும் அறிந்ததே. அப்படி இருந்தும் டெஸ்ட் போட்டியில் ரோஹித் நிராகரிக்கப்படுவது விசித்திரமாகவே இருக்கிறது. ஒருவேளை ஆஸி. டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடினால் டெஸ்ட் போட்டியில் இவருடைய இடம் உறுதிசெய்யப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்திய அணி வீரர்களிளேயே பவுன்சர் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு அதை பவுண்டரிக்கு விளாசுவதில் வல்லவர் ரோஹித் ஷர்மா.

அந்த வகையில் ஆஸி.யில் மிட்செல் ஸ்டார்க்,ஹேசில்வுட் போன்ற வீரர்கள் அதிக பவுன்சர் பந்துகளை வீசக்கூடியவர்கள் அப்போது இந்திய அணியில் ரோஹித்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் நன்றாக விளையாடுவார் என நம்புவதாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கேப்ரசாத் கூறியிருக்கிறார்.

இதனால் ரோஹித் ஷர்மா வாய்ப்பு கிடைத்தால் தன்மீது உள்ள விமர்சனங்களை தனது பேட்டிங்கின் மூலம் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Links