இந்திய அணியின் நான்காம் இடத்திற்கு விஜய் சங்கர் களமிறக்கப்படும் நோக்கத்திலும் அணிக்கு 3 டைமன்சனல் ( 3D) வீரராகவும் திகழ்வார் என்ற காரணத்தால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விஜய்சங்கர் இடம் பெற்றார். ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வருகிறார். இதுவரை நடைபெற்ற லீக் சுற்றின் 13 போட்டிகளில் 20க்கும் குறைந்த பேட்டிங் சராசரியாக விஜய்சங்கர் கொண்டுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய வீரர்களான சுப்மான் கில், மணீஷ் பாண்டே, அஜிங்கிய ரஹானே போன்றோரும் இந்திய அணியில் நான்காம் இடத்திற்கு பேட்டிங் செய்வதற்கான தகுதியான வீரர்கள் ஆவர்.
இளம் வீரர் சுப்மான் கில் நீண்ட நாட்களாக மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கி விளையாடி உள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்று உள்ள மற்ற வீரர்களான கனே வில்லியம்சன் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு இணையாக சமீபத்தைய போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார், மனிஷ் பாண்டே. அதுபோல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அஜிங்கியா ரஹானேவும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். மேலும், ஒரு சதத்தைக்கூட அற்புதமாக அடித்து தனது ஃபார்ம்னை நிரூபித்துள்ளார். மேற்குறிப்பிட்ட மூன்று வீரர்களும் இந்திய அணியில் நான்காம் இடத்திற்கு களமிறக்க கூடிய வீரர்களாவர்.
மீடியம் வேகத்தில் வீசக்கூடிய பந்துவீச்சாளரான விஜய் சங்கர் இந்திய அணிக்கு தேவைப்பட்டால் ஆறாவது பந்துவீச்சாளராக மட்டுமே செயல்பட முடியும். அதன்படி, தற்போது கேதர் ஜாதவ்க்கு ஏற்பட்டுள்ள காயம் உலக கோப்பை தொடர் வரை நீடித்தால் அவருக்கு பதிலாக விஜய் சங்கர் களமிறக்கப்படலாம். நான்காம் இடத்தில் ராகுல் அல்லது மனிஷ் பாண்டே ஆகியோரின் யாரேனும் ஒருவர் களமிறக்கப்படலாம் எனபது ஒரு வழியாகும். மற்றொரு வழி என்னவென்றால், ஒருவேளை கேதர் ஜாதவ் பூரண நலம் அடைந்து அணிக்கு திரும்பினால் விஜய் சங்கர் நான்காம் இடத்திலும் கேதர் ஜாதவ் ஆறாம் இடத்திலும் களம் இறங்குவர்.
அணியில் மணிஷ் பாண்டே மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஆடு லெவனில் வாய்ப்புகள் மறுக்கப்படும். இன்று நடைபெறும் டெல்லி அணிக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்றிலாவது விஜய் சங்கர் தான் இழந்த ஆட்டத்திறனை மீண்டும் வெளிக்கொணர வேண்டும். ஐசிசி விதிகளின்படி 22ஆம் தேதி வரை தங்களது அணியை மாற்றிக் கொள்ளலாம். இதனால், இந்திய தேர்வு குழு வாரியம் இவரை அணியிலிருந்து நீக்குவதற்கும் வாய்ப்பு உண்டு. ஏனெனில், உலக கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஓரிரு வாரங்களில் உள்ள நிலையில் இவரின் ஃபார்ம் மிக மோசமாக உள்ளது. இன்னும் இவரது ஆட்டத்திறன் நிரூபிக்காவிட்டால் இந்திய அணியின் நான்காம் இடம் சற்று கேள்விக்குள்ளாகும்